புதன், 22 மே, 2013

IPLசூதாட்டம்: BCCI ஸ்ரீனிவாசன் மருமகன் விசாரணை வலையில்!

பிசிசிஐ தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் என்பவரை ஐபிஎல். சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீஸ் விசாரிக்கலாம் என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.>நெற்று சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மறைந்த இந்தி நடிகர் தாரா சிங்கின் மகன் விண்டூ தாரா சிங்கை விசாரணை செய்தபோது பிசிசிஐ. ஸ்ரீனிவாசனைன் மகன் குருநாத் மெய்யப்பனுடன் தொடர்ந்து தொலைபேசி உரையாடலில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.குர்நாத் மெய்யப்பந்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. ஆவார்.விண்டூவை விசாரிக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் உறவினருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.ஐபிஎல். போட்டிகளின் போது குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது விண்டூ தாரா சிங் மிக சுலபமாக வி.ஐ.பி. பாக்சில் உட்கார்ந்தார். மேலும் ஆட்டம் முடிந்தவுடன் நடைபெறும் விருந்துகளிலும் விண்டூ மிக எளிதாக கலந்து கொண்டுள்ளார்.இது குறித்து மேலும் விசாரணையில் தகவல்கள் வரும் வரையில் எதுவும் கூற முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஸ்ரீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் விண்டூவுடன் தொலைபேசியில் பல முறை பேசியுள்ளது பற்றி இவரிடம் மும்பை போலீஸ் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.>இப்போதைக்கு அவரை அழைத்து விசாரிப்போம் என்று விசாரணியில் ஈடுபட்டுள்ள காவலதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை: