திங்கள், 20 மே, 2013

கலைஞர் ஸ்டாலினுக்கு கடிவாளம் ! மறைமுக எச்சரிக்கை

சென்னை:""நம்மை நாமே அழித்துக் கொள்கிற அளவிற்கு, நம்மிடத்திலே ஒற்றுமை குலைந்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, வேதனை அடைகிறேன்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தி.மு.க., சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:தி.மு.க.,வில் மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி என, பல அணிகள் இருக்கின்றன. அணிகள் வளர வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று எண்ணுகின்ற அதே நேரத்தில், ஊருக்கு ஊர் உருவாகும் அணிகள் ஒழிய வேண்டும் என்பது தான், நான் வெளியிடுகிற செய்தியாக இருக்க முடியும்.இங்கே பேசும்போது, ஒரு குரல் எழுந்தது. அந்தக் குரலையொட்டி, வேறு சிலர் மறுப்புக் குரல் தெரிவித்தனர்; பின் அக்குரல் அடங்கிற்று. ஏன் அந்தக் குரல் எழுந்தது. அதற்கு மறுப்பாக இன்னொரு குரல் எழக்காரணம் என்னவென்றால், அணிகள் தான்.யாரோ ஒரு நண்பர் அணிகளைப் பற்றி இங்கே பேசும்போது, ஸ்டாலின் கூட குறுக்கிட்டு, "அணிகள் பற்றியெல்லாம் இங்கே பேசத் தேவையில்லை. ஒரு சொற்பொழிவாளர் நடந்து கொள்ள வேண்டிய முறை, அவருக்கு நாம் தரும் வாய்ப்பு, ஆக்கம், ஊக்கம் இதைப் பற்றிப் பேசினால் போதும்' என்றார்.< கட்சிக்கு பிணிகள்:ஸ்டாலின் இளையவர், என்னைப் போன்ற இவ்வளவு அனுபவத்தை, தி.மு.க.,வின் அரசியலில், அவர் இன்னும் உணராதவர். உணர்ந்தவன் என்ற காரணத்தால், இந்த அணிகள் பெருகினால், இவை அணிகளாக இருக்காது. கட்சிக்கு பிணிகளாக ஆகிவிடும்.
இந்த அணிகளை, இப்பொழுதே நாம் திருத்திக் கொள்ள வேண்டும். நம்மை வேறு பகைவர் வந்து அழிக்கா விட்டாலும், நம்மை நாமே அழித்துக் கொள்கிற அளவிற்கு, நம்மிடத்திலே ஒற்றுமை குலைந்து வருகிது என்பதை எண்ணி பார்க்கும் போது வேதனை அடைகிறேன்.இவ்வாறு, அவர் பேசினார். குஸ்பு கூட்டத்தை விட ஸ்டாலின் கூட்டம் குறைவாமே? குஸ்புவை நீக்க முடியுமா?...


தி.மு.க., - பா.ம.க., கூட்டணி கருணாநிதி கிண்டல் பதில்

சென்னை:""தி.மு.க., - பா.ம.க., கட்சிகளுக்கிடையே, கூட்டணி வரும் என்ற செய்திகள் அடிபடுவதாக பத்திரிகையாளர்கள் சொல்கின்றனர்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.இது குறித்து, சென்னையில் அவர் அளித்தபேட்டி:தி.மு.க., பேச்சாளர்கள் கூட்டத்தில் நன்றாகப் பேசுங்கள்; தெளிவாகப் பேசுங்கள்; கட்சியின் கருத்துகளை மக்களின் காதுகளில் போடுங்கள்; இதயங்களிலே பதிய வையுங்கள்; அ.தி.மு.க., பேச்சாளர்களைப் போல பேசாதீர்; நாகரிகத்தோடு பேசுங்கள்; பண்பாட்டோடு பேசுங்கள் என, பேச்சாளர்களுக்கு சொல்லப்பட்டது.எங்களுக்குள் கூட்டணி வேண்டும் என்பதற்கு, வலுவான காரணங்களை சொல்லியிருக்கிறேன். தி.மு.க., - பா.ம.க., கூட்டணி வரும் என்ற செய்திகள் அடிபடுகின்றன என, பத்திரிகையாளர்கள் சொல்கின்றனர். திருமாவளவன், சீமான் பொதுக் கூட்டங்களுக்குத் தடை போடுவது, மாவட்டங்களுக்குள் நுழையக் கூடாது என, தடுப்பது, இதுபோன்ற அரசின் சட்டங்களை, உத்தரவுகளை, ஏற்கனவே நான் மறுத்து, எதிர்த்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்.இவ்வாறு, கருணாநிதி கூறினார். dinamalar ,com

கருத்துகள் இல்லை: