திங்கள், 20 மே, 2013

காதல்திருமணம் செய்த தங்கையை வெட்டி கொன்ற அண்ணன்! மாமனையும் கொன்றான்

நாகர்கோவில்: காதல் திருமணம் செய்த பெண் மாமனாருடன் கொலை - அண்ணன் உள்பட 3 பேர் கைதுகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயராம் (வயது 55), பெயிண்டர். இவருடைய மகன் சிவா (21), பட்டதாரி வாலிபர். இவர் ஒருமுறை நண்பருக்கு போனில் பேச முயன்றபோது வேறு ஒருவருக்கு 'மிஸ்டு கால்' ஆக சென்றது. அந்த மிஸ்டு காலில் சென்னையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த சவுமியா (21) என்பவர் பேசினார். அதன்பிறகு சிவாவும், சவுமியாவும் அடிக்கடி பேசிக்கொண்டனர். இந்த பேச்சு அவர்கள் இடையே காதலாக மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சவுமியாவுக்கு 3 அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர்.
சவுமியாவின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்ததும் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள். இதனால் சவுமியா வீட்டை விட்டு வெளியேறி சிவாவை தேடி நாகர்கோவில் வந்தார். அவர்கள் இருவரும் கிருஷ்ணன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வடசேரி போலீஸ் நிலையத்தில் கடந்த 7-ந்தேதி தஞ்சம் அடைந்தனர்.குடும்ப உறவுகளில் possessiveness தான் அதிகமாக அண்ணன் தங்கை பாசம் அல்லது மகள் பாசம் ஜாதி அபிமானம் போன்ற தோற்றங்களாக வெளிப்படுகிறது. இந்த அண்ணன் தங்கையின் காலில் விழுந்து மன்றடியதாக தெரிகிறது , தங்கை மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறான் என்பதை இது வெளிக்காட்டுகிறது ..தங்கை இனி எப்போதும் கணவனோடுதான் வாழப்போகிறான் என்பது மிக உறுதியாக தெரிந்தபின்தான் மிக நிதானமாக் ப்ளான் பண்ணி இந்த கொலையை செய்திருக்கிறான் , இது போன்ற உளவியல் தகராறுகள் நாட்டில் நிறைய உண்டு



அப்போது சவுமியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சவுமியாவின் அண்ணன் கார்த்திக் நாகர்கோவில் வந்தார். அவர் தங்கையின் கால்களில் விழுந்து தன்னுடன் வந்து விடுமாறு கெஞ்சி உள்ளார். ஆனால் சிவாவுடன் தான் வாழ்வேன் என்று சவுமியா கூறி விட்டார்.

இதனால் போலீசார், சிவாவுடன் சவுமியாவை அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சிவா நாகர்கோவில் வாத்தியார்விளை ரோட்டில் புதிதாக வீடுபார்த்து அங்கு தனது மனைவி சவுமியாவுடன் குடியேறினார். சிவாவின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவருடனே தந்தை ஜெயராமும் தங்கினார்.

சவுமியாவின் சித்தி மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் வந்து பார்த்து சவுமியாவை பார்த்துச் சென்றனர். இந்த நிலையில் சவுமியாவின் மூத்த அண்ணன் சபரிநாத் நண்பர்கள் 2 பேருடன் காரில் நேற்று தங்கை வீட்டுக்கு வந்தார். அவர்களுக்கு மதியம் இறைச்சி எடுத்து சவுமியா சமைத்துப்போட்டார்.

தங்கை வீட்டில் சாப்பிட்டு விட்டு சபரிநாத் நண்பர்களுடன் காரில் ஏறி வெளியே சென்றார். மறுபடியும் மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் சவுமியா, சிவா, ஜெயராம் ஆகிய 3 பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்ததாகவும், வயிற்று பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சிவா வீட்டில் இருந்து ரத்தம் சொட்டச்சொட்ட தப்பி வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் ஜெயராம் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் படுகாயத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்து ரோட்டில் விழுந்தார். உடனே கொலையாளிகள் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதை பார்த்தவர்கள் போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், வடசேரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். படுக்கை அறையில் சவுமியா கழுத்து அறுக்கப்பட்டு, வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

படுகாயம் அடைந்த ஜெயராம், சிவா ஆகிய 2 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜெயராமை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

சிவாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கும் கழுத்து அறுக்கப்பட்டு உள்ளது. மேலும் நெஞ்சில் கத்திக்குத்து விழுந்து உள்ளது. இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது வீட்டில் சமையல் அறையில் சமைத்த சாதம் அப்படியே திறந்து கிடந்தது. சாப்பாட்டு அறையில் சாப்பிட பரிமாறி இருந்த சாப்பாடும் திறந்து கிடந்தது. வீடு முழுவதும் ரத்தமயமாக காட்சி அளித்தது. இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கொலையாளிகள் 3 பேரும் சொந்த காரில் வந்து கொலை செய்து விட்டு தப்பி சென்றதும், வில்லுக்குறியில் காரை நிறுத்தி விட்டு, ஆட்டோவில் அவர்கள் தக்கலைக்கு சென்றதும் தெரிய வந்தது. அங்கு சென்று விசாரித்த போது, ஒரு காரை வாடகைக்கு எடுத்து திருவனந்தபுரம் செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

உடனே குழித்துறை போலீஸ் அதிகாரிகள் 'உஷார்' படுத்தப்பட்டனர். அந்த காரை தமிழ்நாடு-கேரளா எல்லையில் போலீசார் மடக்கிப்பிடித்தனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது :-

நாகர்கோவிலில் இரட்டைக்கொலை நடந்த 2 மணி நேரத்தில் கொலையாளிகள் 3 பேரையும் கைது செய்து, அவர்கள் சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இளம் பெண் சவுமியாவின் அண்ணன் சபரிநாத் (27), திருவள்ளூரைச் சேர்ந்த செல்லப்பாண்டி (24), சேகர் (22) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு மணிவண்ணன் கூறினார்.    

கொலை நடந்தது எப்படி என்பது குறித்து போலீசாரிடம் காயம் அடைந்த சிவா பரபரப்பான தகவல்களை தெரிவித்து உள்ளார். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

நானும், சவுமியாவும் போன் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். சவுமியாவுக்கு அப்பா இல்லை. அம்மா இருக்கிறார். அவரது அண்ணன்கள் சொந்தமாக இரும்பு விற்பனை கடை நடத்தி வருகிறார்கள். இந்த திருமணத்துக்கு சவுமியா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் நாங்கள் தஞ்சம் அடைந்தோம். அப்போது சவுமியாவின் 3-வது அண்ணன் கார்த்திக் வந்து இருந்தார். அவர் பேசி பார்த்த போதும், சவுமியா என்னுடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் புறப்பட்டு சென்று விட்டார். அதன்பிறகு சவுமியாவின் சித்தி உறவினர்கள் வந்து பார்த்துவிட்டு எங்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் சவுமியாவின் மூத்த அண்ணன் சபரி தங்கையுடன் அன்பாக பேசி வந்தார். அவர் என்னுடன் செல்போனில் பேசி நாகர்கோவிலுக்கு 2 நண்பர்களுடன் வருவதாகவும், கோழிக்கறி எடுத்து சமைத்து வைக்கும்படியும் கூறினார். அதன்படி என் மனைவி சவுமியா கோழிக்கறி சமைத்து வைத்தாள்.

இதைத்தொடர்ந்து சபரி மற்றும் அவரது நண்பர்கள் பகல் வீட்டுக்கு வந்து சாப்பிட்டனர். நாளை திருமண சீதனம் வாங்கி தருவதாக சபரி கூறினார். அவர், அழுக்கு துணி இருப்பதாகவும் அதை துவைத்து வைக்கும்படியும் சவுமியாவிடன் கூறி துணிகளை கொடுத்தார். அதன்படி அதை துவைத்து என் மனைவி மாடியில் காயப்போட்டு இருந்தார்.

மீண்டும் மாலை 5 மணி அளவில் அவர்கள் 3 பேரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது சபரி, சட்டை வேண்டும் அயன் செய்து போட்டு போகப்போகிறேன் என்று கூறி விட்டு, படுக்கை அறையில் தங்கையுடன் பேச சென்று விட்டார். நான் துணியை எடுக்க மாடிக்கு சென்ற போது சபரியுடன் வந்தவர் என்னை பின் தொடர்ந்து வந்தார்.

சிறிது நேரத்தில் சவுமியாவின் அவலக்குரல் கேட்டு நான் திடுக்கிட்டேன். அதற்குள் என் பின்னால் வந்தவர் என் கழுத்தில் கத்தியால் அறுத்து வயிற்றில் குத்தினார். நான் அவரிடம் இருந்து தப்பித்து கீழே ஓடி வந்தேன்.

அப்போது என் தந்தையை மற்றொருவர் சரமாரியாக கத்தியால் குத்திக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் படுக்கை அறையில் என் மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனால் நான் அங்கிருந்து உயிர் தப்பி வெளியே ஓடி வந்தேன். இவ்வாறு சிவா கூறி உள்ளார்.   maalaimalar.com

கருத்துகள் இல்லை: