பெங்களூர்: ஐகேட் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல்
அதிகாரி பொறுப்பில் இருந்து பானேஷ் மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.
நிறுவனத்தின் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை தந்தது மற்றும் ஒரு பெண்
ஊழியருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததையடுத்து இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
பானேஷ் மூர்த்தி இவ்வாறு செக்ஸ் குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கப்படுவது இது
இரண்டாவது முறையாகும். ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க
விற்பனைப் பிரிவின் தலைவராக இருந்த இவர் மீது அவரது செயலாளராக இருந்த ரேகா
மேக்சிமோவிச் என்ற பெண் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு கூறியதையடுத்து
மூர்த்தியை ராஜினாமா செய்ய வைத்தது இன்போசிஸ். இது நடந்தது 2003ம் ஆண்டு.
இந்தக் குற்றச்சாட்டைக் கூறிய ரேகாவுக்கு 3 மில்லியன் டாலர்களைத் தந்து
பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்தது இன்போசிஸ்.
இதையடுத்து ஐகேட் நிறுவனத்துக்கு வந்த பானேஷ் மூர்த்தி மீது இப்போது மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தனக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியரிடம் தவறான தொடர்பு வைத்திருந்தது மற்றும் பெண் ஊழியருக்கு செக்ஸ் தொந்தரவு தந்ததாக வந்த புகார்களையடுத்து விசாரணை நடத்திய ஐகேட் நிறுவனம், அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து அவர் பதவி நீக்கம் செய்துள்ளது. மூர்த்திக்குப் பதிலாக ஜெரார்ட் வாட்சிங்கர் அந்த நிறுவனத்தின் இடைக்காலத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது இன்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான மேக்அபீ நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக உள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக