ஞாயிறு, 19 மே, 2013

View Land lineTelephone கோவையில் அறிமுகம் முகம் பார்த்து பேசலாம்

கோவை: லேண்ட் லைனில் முகம் பார்த்து பேசும் வசதி கொண்ட வீடியோ
டெலிபோனி சேவையை கோவை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து கோவை பிஎஸ்என்எல் பொது மேலாளர் ஷாஜகான் கூறியதாவது: தமிழகத்தில் முதல்முறையாக வீடியோ டெலிபோனி சேவை, கோவை யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சேவை வடமாநிலங்களில் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. சாதாரண லேண்ட்லைன் போன்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் சேவையை பிராட்பேண்ட் மூலம் வழங்குவதே இதன் நோக்கம். இந்த சேவை மூலம் தொலைபேசி அழைப்புகள் டேட்டாக்களாக மாற்றப்பட்டு ப்ராட்பேண்ட் மூலம் அனுப்புவதால் எதிர்முனையில் இருப்பவருடன் முகம் பார்த்து பேசலாம்.
தற்போது இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு மட்டுமே இந்த வசதியில் பேச முடியும். வெளிநாடுகளுக்கு பேச முடியாது. எதிர்முனையில் பேசுபவரின் வீடியோவை தெரிவாக பார்க்க முடியும். இந்த சேவையை பெற கம்யூட்டர் மற்றும் லேப்டாப் வசதி தேவையில்லை. இதற்கான வீடியோ திரையுடன் கூடிய கேமரா உள்ளடக்கிய வீடியோ டெலிபோனை பிஎஸ்என்எல் வழங்குகிறது. இதற்கான போஸ்ட் பெய்டு கட்டணம் ஒரே பில் மூலம் செலுத்தும் வசதியுள்ளது. வீடியோ அழைப்பு உரையாடல்களை பெரிய திரைகள் மூலமும் காண முடியும். ஐந்து வகை வடிவங்களில் வீடியோ டெலிபோனி உபகரணம் கிடைக்கும். இதன் விலை ரூ.14,900 முதல் 34,900 வரை. டச் ஸ்கிரீன் வசதியும் உள்ளது. பொதுத்துறை வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தவணை முறையில் உபகரணம் வழங்கப்படும்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: