வியாழன், 26 ஜூலை, 2012

த்ரிஷாவுக்கு ஷாக் கொடுத்த பிரபுதேவா


நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு திரையுலகில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர். (பிளாஷ்பேக் போல சொல்வதென்றால்) ஒரு ஆரேழு வருஷத்துக்கு முன்னாடி த்ரிஷாவை வைத்து தெலுங்கில் பிரபுதேவா எடுத்த படம் செம ஹிட். 

அந்த படத்தை தமிழில் ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் த்ரிஷாவையே வைத்து எடுத்த போதும் ஹிட்டோ ஹிட். (நிகழ்காலத்துக்கு வருவோம்)பல வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா அந்த படத்தை இந்தியில் எடுக்கிறார். த்ரிஷாவும், பிரபுதேவாவும் அவ்வப்போது பார்ட்டிகளிலும் ஒன்றாக கலந்துகொண்டு நட்பு பாராட்டிக்கொண்டே இருந்ததால் த்ரிஷா தான் இந்தியிலும் நடிப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 
ரசிகர்கள் மட்டுமில்லாமல், த்ரிஷாவிற்கே ஷாக் கொடுக்கும் வகையில் நடிகை ஸ்ருதிஹாஸனை நடிக்க வைக்கிறார் மாஸ்டர் பிரபுதேவா. சமீபத்தில் நடந்த பார்ட்டியில் த்ரிஷாவும், நயன்தாராவும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியதையும், மாஸ்டரின் இந்த திடீர் முடிவையும் பிண்ணிக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

கருத்துகள் இல்லை: