புதன், 25 ஜூலை, 2012

காஷ்மீர் மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 883 பெண்கள்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஸ்ரீநகர்: பெண் சிசு கொலை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. 

அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்குப்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் என்ற அளவுக்கு ஆண், பெண் எண்ணிக்கையில் பயங்கர ஏற்றத்தாழ்வு உள்ளது. இதை தொடர்ந்து பெண் சிசு கொலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளதுஎந்த ஒரு அல்ட்ராசவுண்ட் மையத்திலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டுபிடித்து சொல்லும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக தெரிந்தால் உடனடியாக அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மையங்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு அளிக்கப்படும் பரிசு தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படுவதாக மாநில சுகாதார துறை அமைச்சர் ஷாம்லால் சர்மா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: