ஞாயிறு, 22 ஜூலை, 2012

அதிகாரிகள் வேலையை விட்ட உடனேயே தேர்தலில் போட்டியிடத் தடை!

டெல்லி: அரசில் உயர் பதவியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனேயே அரசியலுக்கு வருவதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் தடை வரப் போகிறதாம்.
அரசியலுக்கு யார்தான் வருவது என்று தற்போதைக்கு இந்தியாவில் எந்தவிதமான அடிப்படைத் தகுதிகளும் கிடையாது. படித்தவரும் அரசியலுக்கு வரலாம், படிக்காதவர்களும் வரலாம். இதற்கெல்லாம் ஒரு தகுதியும் கிடையாது.
பண பலம், ஆள் பலம், செல்வாக்கு உள்ளிட்டவை இருப்போர் அரசியலில் வெல்கிறார்கள். அப்பாவிகள், நியாயவாதிகள், நேர்மையாளர்கள் அடித்து விரட்டப்பட்டு விடுகிறார்கள்.
அரசியலுக்கு வருவதற்கு எந்தவிதமான அடிப்படைத் தகுதியும் இல்லாத நிலையில், ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தங்களது ஓய்வுக்குப் பின்னர் உடனடியாக தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப் போகிறார்களாம்.
இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படுமாம். இதற்காக சிவில் சட்ட விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப் போகிறார்களாம்.
எல்லாம் சரிதான், கிரிமினல்கள், கேப்மாறிகள், மொள்ளமாறிகள், முடிச்சவிழ்ப்போர் உள்ளிட்டோருக்கும் கூட இதுபோல தேர்தலில் தடை விதிப்பார்களா என்று அப்பாவி பொதுமக்கள் கேட்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: