செவ்வாய், 13 மார்ச், 2012

ஒரே ஆண்டில் 24 வங்கிகளில் கொள்ளை, என்கவுன்டரில் பலியானயவர்கள்

சென்னை, மார்ச் 12- வேளச்சேரி என்கவுன்டரில் பலியான வங்கி கொள்ளையர்கள், ஒரே ஆண்டில் 24 வங்கிகளில் கொள்ளையடித்த தகவல் கள் வெளியாகி உள்ளன.
சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர், கடந்த மாதம் 23ஆம் தேதி அதிகாலை காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். என் கவுன்டர் நடந்து இன்றுடன் 19 நாட்கள் ஆகின்றன. கொள்ளை யர்களை அடையாளம் காணவும், அவர்கள் பற்றிய பின்னணி தகவல் களை திரட்டவும், சென்னையில் இருந்து உதவி கமிஷனர் தமிழ்ச் செல்வன், ஆய்வாளர் குணவர்மன் ஆகியோர், பீகார் மற்றும் மேற்கு வங்கத்துக்கு சென்று சென்னை திரும்பியுள்ளனர். அவர்கள் கொள் ளையர்கள் பற்றி பல்வேறு தகவல் களை வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:
வங்கிக் கொள்ளையர்கள் 5 பேரும் கூட்டாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியிருக்கின்றனர். இவர்களில் ஹரிஷ்குமார் மீது மட்டும் வங்கிகளில் கொள்ளையடித்ததாக 15க்கும் மேற்பட்ட வழக்குகள், மேற்குவங்க மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2005இல் மடாதிபதி ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கும், இவன் மீது பதிவு செய்யப் பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் அஜய்குமார் ராயும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து ஒரே ஆண்டில் 24 வங்கிகளில் கொள்ளை அடித்துள்ளனர். அஜய்குமார் ராயின் பெயர், அங்குள்ள காவல்துறை பதிவேடுகளில் அம்ரேந்திர குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகுதான், இந்த கொள்ளை கும்பல் பற்றிய தகவல்கள் வெளியே தெரிந் திருக்கிறது. என்கவுன்டர் நடந்த 4 நாட்கள் கழித்து, பீகார் மாநிலத்தில் வங்கி ஒன்றில் ரூ.20 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட கொள் ளையர்களின் குடும்பத்துக்கு நிதி யுதவி அளிப்பதற்காக, அவர்களின் கூட்டாளிகள் இந்த வங்கிக் கொள்ளையை அரங்கேற்றியது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, என்கவுன்டர் தொடர்பான சிபிசி அய்டி விசாரணை முடுக்கி விடப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: