புதன், 28 மார்ச், 2012

கனிமொழிக்கு ஒரு பதில் கூறுங்க சார்!

டில்லி ஹைகோர்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கனிமொழி எம்.பி. தாக்கல் செய்துள்ள மனு, சி.பி.ஐ.-க்கு எக்ஸ்ட்ரா வேலையைக் கொடுத்துள்ளது. கனிமொழி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டு, ஏற்கனவே நடந்துவரும் 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாகவே அவரது புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. “இந்த வழக்கில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்பதே கனிமொழி மனுவின் மெயின் கான்ஸெப்ட். அதை சப்போர்ட் பண்ணுவதற்காக இரு விஷயங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தார் அவர்.
அந்த இரண்டுமே, சி.பி.ஐ.-க்கு கொஞ்சம் வில்லங்கமான ஏரியாக்கள் என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம்.

இந்த மனுவை ஹைகோர்ட் டிஸ்மிஸ் செய்திருந்தால், சி.பி.ஐ.க்கு வசதியாக போய்விட்டிருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை.
நீதிபதி எம்.எல்.மேத்தா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கனிமொழியின் மனுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்று சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டார். சி.பி.ஐ. பதில் தயாரிக்க கால அவகாசம் கொடுக்கும் விதத்தில், வழக்கு விசாரணையை மே 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மே 10-ம் தேதிக்குமுன் ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய திருப்பம் ஒன்றை சி.பி.ஐ. கொண்டுவந்தால், சரி. இல்லாவிட்டால், கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுக்கவுள்ள பதில், “ஆமால்ல.. இவுக பேர்ல ஆதாரம் ஒன்னும் கெடையாதில்ல” என்று இருப்பதற்கு 50:50 சான்ஸ் உள்ளது!
எமக்குத்தான் அவங்களை பிடிக்காதே என்று பச்சையாக கூறமுடியுமா? எல்லாம் அறுபத்தி எழில் ஆரம்பித்த காய்ச்சல்.

கருத்துகள் இல்லை: