செவ்வாய், 27 மார்ச், 2012

ஐகோர்ட் கண்டனம் மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்வில் விளையாடுவது ஏன்?


மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்வில் விளையாடுவது ஏன்?
தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்;
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்காமல் அவர்களது வாழ்க்கையில் விளையாடுவது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த நவம்பர் 8ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. எனினும் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு 27.03.2012 அன்று நீதிபதி சுகுனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, அரசு தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனு மீது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், காலஅவகாசம் அளிக்கமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தாமல் அவர்களது வாழ்க்கையோடு விளையாடுவது ஏன் என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கை இழுத்தடிப்பதற்கம் ஆட்சேபம் தெரிவித்தார்.
வழக்கில் வாதிட அரசு தலைமை வழக்கறிஞரை தவிர, வேறு வழக்கறிஞரே கிடையாதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் அரசு வழக்கறிஞர் கோரியப்படி காலஅவகாசம் தர மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 29.03.2012க்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை: