சனி, 21 ஜனவரி, 2012

பஞ்சாபில் ஆட்சியை இழக்கிறது பா.ஜ., ; காங்கிரசுக்கு கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு

அமிர்தசரஸ்: நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.,தலைமையிலான கூட்டணி ஆட்சியை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், வளர்ச்சி பணிகள் சரிவர எதுவும் நடக்கவில்லை என்பது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகவும், இங்கு காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் இடம் கிடைக்கும் என்றும் இந்தியா டூடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அன்னா ஹசாரேயின் கருத்தை ஏற்று வாக்களிப்பீர்களா என்று கேட்டதற்கு அவ்வாறு செய்ய மாட்டோம் இதனை ஏற்க போவதில்லை என்றும் 46 சதவீதத்தினர் கருத்து கூறியுள்ளனர்.
இந்த மாநிலத்தில் பா.ஜ., சிரோன்மணி அகாலிதள் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது அங்கு இந்த கட்சியை சேர்ந்த பிரகாஷ்சிங் பாதல் முதல்வராக இருந்து வருகிறார்.

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கிய கருத்துக்கணிப்பில் மக்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து ஊழலற்ற நிர்வாகம் தரக்கூடிய கட்சி எது என்ற கேள்விக்கு பா.ஜ., கூட்டணிதான் என்றும் காங்கிரஸ் மீது அதில் அதிருப்தி தான் என்றும் கூறியுள்ளனர். யார் முதல்வராக விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்ரீந்தர்சிங் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர், இங்கு 52 சதவீதத்தினர் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் தற்போதைய அரசு வளர்ச்சி பணிகள் எதுவும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர். இதன்படி கடந்த 2007 தேர்தலை விட காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் எம்.எல்.ஏ.,க்கள் கிடைக்கும் என கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: