புதன், 18 ஜனவரி, 2012

நடிகை ஆசைகாட்டி சென்னைக்கு கடத்திவரப்பட்ட கேரள இளம்பெண் எங்கே? 8 மாதமாகியும் கிடைக்கவில்லை


சென்னை : கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மகள் லட்சுமி (16). அதே பகுதியில் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், 2011 மே மாதம் 29ம் தேதி லட்சுமி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து வடக்கு எர்ணாகுளம் டவுன் போலீ சார் விசாரித்து முகமது ஷபிக்(23) என்பவரை கைது செய்தனர்.  போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்:
லட்சுமிக்கும் எனக்கும் 5 மாதங்களாக பழக்கம் இருந்தது. அவரை நடிகை ஆக்குவதாக ஆசை காட்டினேன். இதை நம்பிய லட்சுமியை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றேன். பின்னர் சென்ட்ரல் அருகில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தேன். பின்னர் வடபழனியில் உள்ள நடிகர் ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்தேன். இதனால் அவரது வீட்டில் தங்க வைத்தேன். சில நாட்களில் கேரளாவில் எனக்கு வேலை இருக்கிறது, போய் விட்டு வந்து விடுகிறேன் என்று லட்சுமியிடம் சொல்லி வந்து விட்டேன். இந்நிலையில் நான் திரும்பி வராததால் அந்த வீட்டில் இருந்து லட்சுமி வெளியேறி விட்டார். பிறகு எங்கு சென்றார் என்பது தெரியவில்லைÕÕ.

இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார்.

இதையடுத்து முகமது ஷபீக் மீது கடத்தல், பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முகமது ஷபீக்கை வடக்கு எர்ணாகுளம் டவுன் போலீசார் சென்னைக்கு சில வாரங்களுக்கு முன்பு அழைத்து வந்தனர். சென்னையில் லட்சுமியை அழைத்து சென்ற இடங்களுக்கெல்லாம் போலீசாரை கூட்டிச் சென்று காண்பித்தார். அவர் தங்கியிருந்த வீட்டிலும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் லட்சுமி பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதைத் தொ டர்ந்து முகமது ஷபிக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு லட்சுமியை பாண்டிபஜாரில் பார்த்ததாக கேரளாவை சேர்ந்த ஒருவர் எர்ணாகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரை பற்றி விவரங்கள், புகைப்படங்கள் அனைத்தையும் சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு வடக்கு எர்ணாகுளம் டவுன் போலீ சார் பேக்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். அவரை பற்றி விவரங்கள் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். லட்சுமி பற்றி விவரங்களை 094979 87104 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: