சனி, 1 அக்டோபர், 2011

கனிமொழிக்கு ஜாமின் சி.பி.ஐ எதிர்ப்பு, சிதம்பரத்தை விசாரிக்ககூட தேவை இல்லை

புதுடில்லி :"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க, சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத் குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் புரோமோட்டர் ஷாகித் பல்வா, குசேகான் வெஜிடபிள்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி ஆகிய ஏழு பேரும், இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கு ஜாமின் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு பின் தான், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமின் கோர முடியும். எனவே, அவர்களுக்கு ஜாமின் அளிக்கக் கூடாது. கலைஞர் "டிவி'யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது. கலைஞர் "டிவி'யின் செயல்பாடுகளில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. கலைஞர் "டிவி'யின் அன்றாட நடவடிக்கைகளை சரத் குமார் தான் கவனித்து வந்தார். இந்த "டிவி' சேனலுக்கு வந்த 200 கோடி ரூபாய் பரிமாற்றம், நேர்மையான வர்த்தகம் தொடர்பான பரிமாற்றம் அல்ல. சட்ட விரோதமாக வந்தது.இவ்வாறு சி.பி.ஐ., மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sarokanna TN63 - karaikkudi,இந்தியா
2011-10-01 04:04:43 IST Report Abuse
கனி, ராசாவுக்கெல்லாம் ஜாமின் அளிக்க கூடாது ன்னு நீங்க சொல்றது சரிதான், ஆனால் சிதம்பரத்தை பற்றி சொன்னப்போ விசாரிக்ககூட தேவை இல்லைன்னு சொல்லி, நீங்க யாரு? உங்க பவர் என்னனு எங்களுக்கு புரியவச்சுடீங்க???

கருத்துகள் இல்லை: