வியாழன், 29 செப்டம்பர், 2011

கணவனுக்காக தனது தற்கொலை காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து வைத்த பெண்


மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.நேற்று காலை சம்தாஷி வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிதிஜிங் கணவரிடம் உங்களிடம் முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டி உள்ளது. எனக்காக 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள் என்று கேட்டார். இதற்கு ஒப்புக் கொண்ட சம்தாஷி 10 நிமிடங்கள் அவருடன் பேசினார்.

பின்னர் ஆபீசுக்கு கிளம்பிய போது மீண்டும் அவரை தடுத்து நிறுத்தினார். ஏற்கனவே ஆபீசுக்கு நேரமாகி விட்ட அவசரத்தில் இருந்த சம்தாஷி, மனைவியின் செயலால் கோபம் அடைந்து அவரை சத்தம் போட்டுவிட்டு ஆபீசுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த நிதிஜிங் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
தனது செல்போனில் கணவருக்கு “சாரி” (மன்னியுங்கள்) என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.

ஆனால் அதை சம்தாஷி பொருட்படுத்தவில்லை. கணவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் தனது தற்கொலை காட்சியை கணவர் பார்க்க வேண்டும் என்பதற்காக அதை தனது செல்போனில் பதிவு செய்ய தீர்மானித்தார்.

தனது பெட்ரூமில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு செல்போனில் உள்ள கேமிராவை ஆன் செய்து அதை சரியான கோணத்தில் பொருத்தி வைத்தார்.

பின்னர் தூக்கில் தொங்கி உயிரை விட்டார். மதியம் நிதிஜிங்கின் தந்தை போன் செய்தார். பதில் இல்லாததால் அருகில் குடியிருக்கும் உறவினரிடம் விபரத்தை சொல்லி, நேரில் போய் பார்த்து விட்டு வருமாறு கேட்டுக் கொண்டார். அவர் போய் பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் நிதிஜிங் பிணமாக கிடந்தார்.

இந்த தகவலை நிதிஜிங்கின் பெற்றோருக்கும், கணவருக்கும் தெரிவித்தார். உடனடியாக பதறியடித்து கொண்டு அவர்கள் வந்தனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து நிதி ஜிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிதிஜிங்கின் செல்போனை கைப்பற்றி அதை பரிசோதித்து பார்த்தனர்.

அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் மட்டுமே பொறுப்பு. சிறிய மனக்கசப்பு காரணமாகவே இந்த முடிவை நான் எடுத்தேன். யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை.

அடுத்த பிறவியில் எனது குடும்பத்துக்கும், கணவரின் குடும்பத்துக்கும் பொதுவான நடுவராக பிறக்க விரும்புகிறேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அடுத்து நிதிஜிங் தற்கொலை செய்த காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதைப் பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கருத்துகள் இல்லை: