ஹைதராபாத், ஜூன்.27: ரூ 35 லட்சம் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சத்யசாய் அறக்கட்டளை உறுப்பினர் வி.சீனுவாசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.முன்னதாக ஆந்திரா-கர்நாடக எல்லைப் பகுதியில் ரூ 35 லட்சம் பணத்துடன் சாய்பாபா அறக்கட்டளை வாகனம் ஒன்று சமீபத்தில் பிடிபட்டது. அந்த வாகனத்தின் டிரைவர் சீனுவாசனின் பெயரையும், சாய்பாபா உறவினர் ரத்னாகர் ராஜூவின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில் ரத்னாகரிடம் சனிக்கிழமையன்று விசாரணை நடைபெற்றது. இன்று சீனுவாசனிடம் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்தனர்.எனினும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையில்லாதவை என்று இருவரும் மறுத்துள்ளனர்.முன்னதாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஹரிஷ்நந்தா ஷெட்டி, சந்திரசேகர் மூர்த்தி மற்றும் பொறியாளர் சோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர் மந்திர் திறக்கப்பட்டதற்கு மறுநாள் அந்த பணம் கர்நாடக எல்லைப் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக