திங்கள், 24 பிப்ரவரி, 2025

ஜெர்மனி ஆளும் கட்சி தோல்வி! அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தோல்வியை ஒப்புக்கொண்டார்

 மாலை மலர் :  பெர்லின் ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார்.
இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அதிபர் ஆவதற்கே வாய்ப்புள்ளது என்றும், அவரது கட்சி முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஏ.எப்.டி. இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜெர்மனி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் எனக்கூறி தோல்வியை ஒப்புக் கொண்டார் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ்.

கருத்துகள் இல்லை: