![]() |
jaffnamuslim.coம் உலகறிந்த பாடகர் இசைமுரசு மர்ஹூம் நாகூர் ஈ. எம் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு நிகழ்வை,
இலங்கையில் ஜூலை மாதத்தில் சிறப்பாக நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் பங்கேற்பதற்காக, தமிழகத்திலிருந்து வருகை தந்த நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் , ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.ஷாஹுல் ஹமீத் சகிதம் ஸ்ரீ லங்கா மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், ஆர்வலர்களோடு கலந்துரையாடியுள்ளார்.
இரு நாடுகளினதும் கலைஞர்களும்,அரசியல் பிரமுகர்களும் விமரிசையாக நடைபெறவுள்ள இந் நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழ் பேசும் கலை,இலக்கிய முக்கியஸ்தர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக