திங்கள், 24 பிப்ரவரி, 2025

நாம் தமிழர் கூடாரம் காலியாகிறது! .. எடுத்தெறிந்து பேசிய சீமான்.. அஸ்திவாரமே ஆட காரணமான விஷயம்

tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன், தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும் என்று காளியம்மாள் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து வரிசையாக மூத்த நிர்வாகிகள் பலரும் வெளியேறி வருகின்றனர்.
காளியம்மாள் என்று இல்லை.. நாம் தமிழர் கட்சியின் முகமாக.. மாவட்ட அளவில் இருந்த பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர். கட்சியின் முக்கிய தலைவர்கள் என்று கருதப்பட்ட பல உள்ளூர் தலைகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். அதிலும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வெளியேற தொடங்கி உள்ளனர். அதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.



பலாத்காரம், 6 முறை கருக்கலைப்பு..விஜயலட்சுமி வழக்கில் நீதிபதி கருத்து- சீமான் 'அசால்ட்' பதில்!

1. கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கி உள்ளது. அந்த கட்சியில் மீண்டும் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது.

2. கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் யாரையும் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியின் சீமான் நினைக்கவில்லை. சீமான் இவர்களிடம் பேசாமல் போனதே இதற்கு முக்கிய காரணம். போனால் போகட்டும்.. கட்சி யாரையும் நம்பி இல்லை என்று சீமான் கூறியதாக தெரிகிறது.

3. கட்சியில் நீண்ட காலமாக இருக்கும் நிர்வாகிகளுக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படுவது இல்லை. அவர்களுக்கு கட்சியில் மதிப்பு இல்லை. நிர்வாகிகள் சொல்லக்கூடிய ஆலோசனைகளுக்கு சீமான் மதிப்பு தருவது இல்லை.

Recommended For You
காளியம்மாள் அந்த கட்சியில் இணைகிறாரா? இதுதான் அந்த மாஸ்டர் பிளானா? அமைப்பு தொடங்குவது எப்போது?

4, சீமானின் பேச்சும் சமீபகாலமாக கட்சியினருக்கு எதிராகவே இருந்து வருகிறது. குறிப்பாக, மக்கள் ஓட்டு போடுறது எனக்காகத்தான், உங்கள் யாருக்கும் கிடையாது. இருக்கிறவன் இருங்க; விருப்பம் இல்லாதவன் வெளியே போங்க என்று எடுத்தெறிந்து அவர் தொடர்ந்து பேசுவதில் கட்சிக்குள் அவருக்கு எதிரான அதிருப்திகள் அதிகரித்தபடி இருந்து வருகிறது.

5. அதிருப்தியாளர்கள் அனைவரையும், கட்சியிலிருந்து விலகிய நாம் தமிழர் மா.செ.க்கள் ஒன்றிணைத்து வருகிறார்கள். இவர்கள் தொடர்ச்சியான ஆலோசனையில் இருக்கின்றனர். ஒரு கட்சியின் தலைவரின் நடவடிக்கை இப்படியெல்லாம் இருக்கக்கூடாது; அதிமுகவின் சர்வாதிகாரி, இரும்புபெண்மணி என்றெல்லாம் சொல்லப்பட்ட ஜெயலலிதா கூட, அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக ஒரு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தப் பிறகு தான் அப்படி மாறினார்.

6. சீமான் மீது கோபம் - நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வை கூட பெற்றுத் தரமுடியாத சீமான், இப்படி எதேச்சதிகார பாணியில் கட்சியினரிடம் நடந்து கொள்வது ஆரோக்கியமில்லை என்கிற அளவில் அவர்களின் அதிருப்திகள் வெடித்தபடி இருக்கிறது. அக்கட்சியிலிருந்து விலகிய மா.செ.க்கள், அதிருப்தியாளர்களிடம், நமக்கான அரசியலை நாம் எடுத்தாக வேண்டும். சும்மா இருந்துவிட முடியாது.

You May Also Like
பிசிறு, தனி கோஷ்டி..பொதுச்செயலாளர் பதவிக்கு அடம்.. காளியம்மாள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய சீமான்

7. அதனால், திமுகவில் இணையலாமா? அல்லது விஜய் கட்சியில் சேரலாமா? என்கிற கேள்வியை எழுப்பி வருகிறனர். அதற்கு, கலவையான பதிலே கிடைத்திருக்கிறது. இன்னும் தீர்க்கமாக ஆலோசித்துவிட்டு ஒரு முடிவை எடுப்போம் என்கிற அளவில் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை விளைவாகவே தற்போது காளியம்மாள் வெளியேறி உள்ளார்.
 

கருத்துகள் இல்லை: