செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

Kerala சினிமாவின் பாலியல் ...மோகன்லால் உள்பட அனைவரும் ராஜினாமா.. மலையாள நடிகர் சங்கம் கலைப்பு

 மாலை மலர்  :  கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
மலையாள திரைப்படம் நடிகர்கள் சங்கத்தின் ப்ரெசிடண்ட் பொறுப்பில் இருப்பவர் நடிகர் மோகன்லால். அவர் தற்பொழுது அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.



இவர் மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடித்தத்தை சமர்பித்துள்ளனர். இதுக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் " சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதற்கு காரணம் சங்கத்து உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இது கடந்த சில நாட்களுக்காக அனைத்து பத்திரக்கை ஊடங்களில் பேசும் பொருளாக இருக்கிறது. இதனால் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தார்மீக அடிப்படையில் செயற்குழுவை கலைக்க தீர்மானம் செய்துள்ளோம். புது செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் மறு தேர்தல் வைத்து இன்னும் 2 மாதங்களில் உருவாக்கப்படும்" என தெரிவித்துள்ளனர். மேலும் புது செயற்குழு மற்றும் தலைமை பொறுப்பு விரைவில் இந்த சங்கத்தை மீண்டும் புதிய பலத்துடனும், உத்வேகத்துடனும் மீட்டெடுக்கும். அனைவருக்கும் நன்றி எங்கள் மேல் உள்ள பிழையை சுட்டி காட்டியதற்கு என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: