வியாழன், 24 நவம்பர், 2022

கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி

tamil.asianetnews.com  -  vinoth kumar   :  கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
தற்போது பிக்பாஸ் சீசன் 6ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதேபோல், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில்  கமல் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு ஐதராபாத் சென்று திரும்பிய நிலையில் அவர் சோர்வாகவே காணப்பட்டுள்ளார். மேலும், சளி உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளும் இருந்து வந்துள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பிக்பாஸ் சீசன் 6ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில்  கமல் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு ஐதராபாத் சென்று திரும்பிய நிலையில் அவர் சோர்வாகவே காணப்பட்டுள்ளார். மேலும், சளி உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் கமல்ஹாசன் டெஸ்ட் ரிப்போர்ட் வந்த பிறகு இன்று மாலை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம் கொரோனா பாதிப்பின் போதே மருத்துவமனையிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் நடத்தியதாக சமீபத்தில் கமல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: