குறிப்பாகக் கொரோனா தொற்றுக்குப் பின்பு கோயம்புத்தூர் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால் மிகையில்லை.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் தான் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், திறமையான ஊழியர்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும், பல்வேறு செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகக் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தைத் திறந்து வந்தது, ஆனால் தற்போது நிலைமை மாற்றியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகக் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தைத் திறந்து வருகிறது.
அலுவலகம் மற்றும் கமர்சியல் ரியல் எஸ்டேட்
கோயம்புத்தூரில் அதிகப்படியான நிறுவனங்கள் அடுத்தடுத்து வர்த்தகத்தையும் அலுவலகத்தையும் திறந்து வரும் காரணத்தால் கோவை மாவட்டத்தைச் சுற்றி அலுவலகம் மற்றும் கமர்சியல் ரியல் எஸ்டேட் வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்து வருகிறது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி
இதன் மூலம் கோயம்புத்தூர் நகர் முக்கியப் பகுதிகள் மட்டும் அல்லாமல் நகரின் புறநகர் பகுதிகள் 30 கிலோமீட்டர் சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் விரிவாக்கத்திற்காகவும், வெளிநாட்டு ரீடைல் நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகவும் கோயம்புத்தூரில் குவிகின்றனர்.
Mindox Techno 2வது அலுவலகம்
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் செமிகண்டக்டர் உற்பத்திக்கான கருவிகள், உபகரணங்களை டிசைன் செய்து, சொந்தமாகத் தயாரிக்கும் நிறுவனமான Mindox Techno இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைக் கோயம்புத்தூரில் சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில், தற்போது 2வது இந்திய அலுவலகத்தையும் கோவை சிங்காநல்லூரில் திறந்துள்ளது.
ரென்டிலி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரென்டிலி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் தனது புதிய அலுவலகத்தை ரத்தினம் டெக்சோன் பகுதியில் திறந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 280 ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடியும்.
ரென்டிலி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் ஹோம் மற்றும் டூரிங் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் சேவைகளை வழங்கி வருகிறது.
Algorics நிறுவனம்
இதைத் தொடர்ந்து அமரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மற்றொரு நிறுவனமான Algorics தனது 4வது இந்திய அலுவலகத்தைக் கோயம்புத்தூரின் விஎன் இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட்ல் துவங்கியுள்ளது. Algorics நிறுவனம் டேட்டா-வை முதன்மைப்படுத்தும் பியோமெட்ரிக்ஸ் சேவைகள் வழங்கி வருகிறது.
TIDCO அமைப்பு
சமீபத்தில் தமிழ்நாடு அரசின் TIDCO அமைப்பு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் துறைகான Common Engineering Facility Center அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தச் சென்டர் மூலம் டிசைன், சிமுலேஷன், உற்பத்தி, அசம்பிளி ஆகிய பணிகளைச் செய்ய முடியும். இதன் மூலம் பாதுகாப்பு சார்ந்த வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
அனைத்து துறையும் வளர்ச்சி
கோயம்புத்தூர் உற்பத்தி துறை, சேவை துறை, MSME துறை, ஏற்றுமதி வரையில் அனைத்து துறைக்கும் ஏற்ற இடமாக உள்ளது. ஒருபக்கம் உற்பத்தி, டெக்ஸ்டைல் துறையை மையமாக வைத்து தனது பொருளாதார பயணத்தைத் துவங்கினாலும், தற்போது கல்வி, சேவை, ஏற்றுமதி, போக்குவர்த்து, ரீடைல் எனப் பல துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக