சனி, 26 பிப்ரவரி, 2022

ஜேஆர் ஜெயவர்தனவும் ஜெயக்குமார் ஜெயவர்தனவும் .. என்ன உறவோ ... என்ன அறிவோ

செல்லபுரம் வள்ளியம்மை  : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனவின் பிறந்த தேதி  29 May 1987 -
இந்த காலப்பகுதியில் இலங்கை அதிபர் ஜெ ஆர் ஜெயவர்த்தனா அரசின் ராணுவம் தமிழ் பகுதிகளில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது..
 4 ஜூன் மாதம்  1987 ஆண்டு இந்திய அரசின் விமானபடையின் விமானங்கள் அச்சுவேலி பகுதியில் அரிசி பருப்பு போன்ற உணவு பொதிகளை போட்டு ஜேயார் ஜெயவர்தனவுக்கு இந்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டினை தெரிவித்தது
 29 ஜூலை  1987 இல் இலங்கை அரசு வேறு வழியின்றி இந்திய அரசோடு சமாதான ஒப்பந்தம் செய்தது  
அதுதான் ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தம்
இப்படியான வரலாற்று பின்புலத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு  29 May 1987    பிறந்த மகன்தான் (அதிமுக முன்னாள் எம்பி) ஜெயவர்த்தன்  ஜெயக்குமார்!
அதிமுக ஜெயக்குமாருக்கு ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் பெயரை தனது மகனுக்கு வைக்கவேண்டும் என்று ஏன் தோன்றியது?
அவ்வளவு அரசியல் அறிவா?
அல்லது இலங்கை தமிழர்கள் மீது உள்ள அளவு கடந்த குரோதமா?

கருத்துகள் இல்லை: