வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

புடினுக்கு போன் போட்டேன் எடுக்கவில்லை.. உக்ரைன் அதிபர் உருக்கமான உரை!

 Nantha Kumar R  -   Oneindia Tami : s கிவ்: ‛‛ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் பேசவில்லை.
இதனால் இது ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகப்பெரிய போரின் தொடக்கமாக இருக்கலாம்'' என உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலன்ஸ்கி உருக்கமாக நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளது.
வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் உக்ரைனில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
உயிர் பயத்தில் உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்கின்றனர்.
இதனால் நாட்டில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் வீடியோ மூலம் உருக்கமாக பேசினார்.
வீடியோவில் அவர் பேசியதாவது:


மிகப்பெரிய போர் -  ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் பேசவில்லை. இதனால் இது ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகப்பெரிய போரின் தொடக்கமாக அமையலாம். இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என உலகத்தில் உள்ள அனைவரும் கூறிய நிலையில் தற்போது தொடங்கி உள்ளது.

உக்ரைன் மக்களை சுதந்திரமாக்குவதாக நீங்கள்(புதின்) கூறுகிறீர்கள். ஆனால் உக்ரைன் மக்கள் இப்போதும் சுதந்திரமாகவே உள்ளனர். உங்களது பார்வையில் உள்ள உக்ரைனும், உண்மையில் உள்ள உக்ரைனுக்கும் இரண்டு வெவ்வேறான வித்தியாசங்கள் உள்ளன. நான் கூறுவது உண்மை. பாதுகாப்புகளை உறுதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவும் ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். அமைதி பேச்சுக்கு தயார் என பல முறை அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால் புதின் செவிசாய்க்கவே இல்லை.

புதின் அவர்களே எங்களை நாஜி (ஹிட்லர் படை) படை என கூறுகிறீர்கள். நாஜிசத்தை எதிர்க்க 8 மில்லியன் (80 லட்சம்) உயிர்களை கொடுத்த ஒரு நாடு அதை எப்படி ஆதரிக்க முடியும்.
 நான் எப்படி நாஜியாக இருக்க முடியும். ரஷ்யாவுக்கு உக்ரைன் அச்சுறுத்தலாக இருக்கும் என நீங்கள் கூறுகிறீர்கள். அது கடந்த காலத்தில் இல்லை. நிகழ்காலத்தில் இல்லை. எதிர்காலத்திலும் இருக்காது. எப்போதும் இருக்காது.

எதிரியாக இது காரணமா  - நாங்கள் ரஷ்யாவின் கலாசாரத்தை வெறுப்பதாக கூறுகிறீர்கள். எப்படி ஒருவர் கலாசாரத்தை வெறுக்க முடியும். வெவ்வேறு கலாசாரம் கொண்டவர்கள் அக்கம் பக்கம் இருந்தால் எப்போதும் ஒருவரையொருவர் கலாசார ரீதியாக வளப்படுத்துவார்கள். ஆனால் அது அவர்களை ஒன்றாக்காது. நாங்கள் வேறுபட்டவர்கள்.
ஆனால், எதிரிகளாக இருப்பதற்கு அது ஒரு காரணமல்ல. போரை விரும்புகிறீர்களா போரை விரும்புகிறீர்களா ரஷ்ய மக்கள் போரை விரும்புகிறீர்களா?. இந்த கேள்விக்கான பதிலுக்கு காத்திருக்கிறேன். நம் வரலாற்றை நாமே அமைதியாகவும், நேர்மையாகவும் தீர்மானிக்க வேண்டும்'' என உருக்கமாக கூறினா

கருத்துகள் இல்லை: