வியாழன், 16 ஜனவரி, 2020

உதயநிதி : பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன்!

polimernews.com:  முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரான அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா- என்று கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் திமுகக்காரன் என்றும் பொங்கல் வாழ்த்துகள் என்றும் அவர் கூறி உள்ளார். சென்னையில் நடைபெற்ற துக்ளர் இதழ் விழாவில் பேசிய ரஜினி, முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: