வெள்ளி, 17 ஜனவரி, 2020

பிறப்பின் வலி ....

Devi Somasundaram : சில வருடம் முன்ன அட்வகேட்டா இருக்கற என் சித்திகிட்ட ஒரு கேஸ் வந்துச்சு . விவாகரத்து வழக்கு .மனைவிக்கு குழந்தை டெலிவரி
ஆகி பத்து நாள்குல்ல மனைவிய செக்ஸ்க்கு கணவன் வற்புறுத்த மனைவி உடம்பு முடியலன்னு மறுக்க கணவன் அடிச்சதுல தலைல அடிபட்டு பாதிக்கப் பட்ட தங்கச்சிக்கு அவள் கணவர்கிட்டேர்ந்து விவாகரத்து கேட்டு வழக்கு .
பிரசவ வலின்ற வரை மட்டும் நம் சமூகம் சொல்லி வைத்து இருக்கு..வெறும் லேபர் பெய்ன் மட்டும் பிரசவ வலி இல்லை .3 கிலோ வெய்ட் உள்ள
ஒரு தேங்காய உங்க வயித்துகுல்ல போட்டுட்டு அதை உங்க ஆனஸ் வழியா பிதுக்கி எடுத்தா எப்படி இருக்கும் .
ரெக்டம் கிழிஞ்சு, வஜைனாலேர்ந்து சதை கிழிந்து மலக்குடல் சதை அழுத்தப்பட்டு பைல்ஸ் வரும் அளவு சதை லூசாகி ..கர்ப்பப்பை தளர்ந்து ,இடுப்புக்கு கீழ எல்லா சதையும் தளர்ந்து.
கிழிந்த இடம் தையல் போடப் பட்டு, இப்பலாம் புரோட்டின் ஸ்டிச் , முன்னாடி நரம்பு தையல் , உட்கார்ந்தாலே குத்தும் .
புரோட்டின் ஸ்டிச் ஆற் ஆற காயம் குத்தும்
அதோட குழந்தைக்கு உட்கார்ந்து பால் தரணும் .2 மணி நேரத்துக்கு ஒரு முறை 20 நிமிடம் பால் தரணும்..
நைட்ல தூங்க முடியாது.காயம் வலிக்கும் ,டயர்ட்னெஸ். காலை மடிச்சு உட்கார முடியாது, ஸ்டிச்சஸ் விட்றும். ( ஒவ்வொரு முறை எழுந்து உட்காரும் போதும் அண்ணி வலில தவிக்கிறது கொடுமையா இருக்கு) .
குழந்தை வாய் குட்டியா இருக்கு, நிப்பில் வாய்குல்ல போகவே மாட்டுது .அழுத்தி குடுத்தா நிப்பில் வெடிச்சு ரத்தம் வருது .( இதைலாம் பார்த்தா சத்தியமா கல்யாணம் பண்ணிகிற ஆசைலாம் வரவே வராது ) .

. மோஷன் போற பாதை சதைலாம் அழுதப்பட்டதால மோஷன் போக மாட்டேங்குது..டைட்டா போனா வலிக்குது..ப்ளட் வருதுன்றா .
வலிக்கு ஹாட் வாட்டர டப்ல ஊத்தி அதுல உட்கார்ந்துகறா ...அதுகுல்ல குழந்தை பாலுக்கு அழுது ..
மோஷன் ப்ரி யா போக டாக்டர் காய்கறி சேர்த்து சாப்ட சொல்றாங்க ..வீட்ல பத்திய் சாப்பாடு தான்றாங்க .
இடுப்புக்கு கீழ எப்பவும் வலிச்சுட்டே இருக்கற மனனிலைல ஒரு பெண்ணோட உணர்வுகள புரிஞ்சுக்க ரெடியா இருக்கா குடும்பம்.
போஸ்ட் டெலிவரி பிரச்சனைகளை ,வலிய யாரும் பேசுவதே இல்லை..பெண்ணுக்கு வலிக்கும்னு இந்த சமூகம் உணர்வதே இல்லை ..
யாராச்சும் ஆவண படமா எடுத்தாச்சும் இதை எல்லாம் சொல்லனும்.
டெலிவரி ஆன பெண் ஏன் 6 மாதம் அம்மா வீட்ல இருப்பான்னு இப்ப புரியுது. மாமியார் வேலை செய்ய சொல்வாங்க, கணவனுக்கு அவன் தேவைகள் .இதில இருந்து தப்பிக்க தான் இந்த ஏற்பாடு போல .
கிராமத்தில நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போது பெரிய பாட்டி ஒருத்தவங்க நின்னுகிட்டே டாய்லட் போவாங்க..அவங்களால உட்கார முடியாது ..
ஏன்னு கேட்டப்ப பாட்டிக்கு அடி தள்ளிருச்சி உட்கார முடியாதுன்னு சொல்வாங்க ..அப்ப அது புரியல ..அப்றம் வயது வரப்ப பாட்டியோட கர்ப்பபை வஜைனா வழியா கீழ இறங்கிடுச்சு , டாய்லட் போறப்ப வெளில வந்துடும் ..டாய்லட் போக இடைஞ்சலா இருக்கும் ..அதனால நின்னுகிட்டே போவாங்கன்னு சொல்லி புரிஞ்சுது .
காரணம் தாத்தாயோட உடல் ரீதியான தேவை ..டெய்லி செக்ஸ் ..ப்ரீயட்ஸ் நாளில் கூட உள்ள தான் படுக்கனுமாம் பாட்டி...உள்ள உள்ள தசைலாம் லூசாகி கர்ப்பபை கீழ இறங்கிடுச்சு ..இப்பலாம் ஆபரேஷன் செய்து எடுத்துடறாங்க ...
தஞ்சாவூர் ஹாஸ்பிடல்ல டாக்டரா இருந்த என் மாமா சொல்லி கேள்வி பட்டது ..டிரிட்மெண்ட்க்கு வந்த பெண்ணை ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கும் போதே அவர் கணவர் படுக்க அழைத்து தொல்லை செய்து ..உடல்வலில அவர் அழுது மற்ற பேஷண்ட்லாம் திட்டி சண்டைலாம் நடக்கும்னு சொல்வார் .
ஆண்களுக்கு செக்ஸ் சந்தோஷம் அதிகமா தேவை இருக்கலாம்..ஆனா அது ஒரு பெண்ணோட வலில அடையறதா இருக்கக் கூடாது
இதை ஆண்கள் புரிஞ்சுப்பாங்களா ? .புரிய வைக்க வேண்டியது யார் பொறுப்பு ?..
#தேவி.

கருத்துகள் இல்லை: