அமெரிக்காவில் சர்வதேச யோகா தினத்தை அங்குள்ள இந்தியத் தூதரகம் "இந்து
சுயம்சேவாக் சங் "(எச் எஸ் எஸ்)எனும் அமைப்போடு சேர்ந்து கொண்டாடியிருக்கிறது.
இந்தத் தகவலைத் தந்துள்ள "இந்து" ஏடு "அந்த அமைப்பானது ஆர் எஸ் எஸ் சின்
துணை அமைப்பு" என்பதையும் தெரிவித்துள்ளது. அனைத்து மக்களின் வரிப்பணத்
தில் நடக்கிற இந்திய அரசின் தூதரகம் எப்படி ஒரு தனியார் அமைப்போடு சேர்ந்து
விழாஎடுக்கலாம்? செலவெல்லாம் அரசினுடையது, அந்த மேடையை ஆக்கிரமித்துக்
கொள்வது அந்த தனியார் அமைப்பாக இருக்கும் ! அப்புறம் இந்தியாவின் அரசியல்
சாசனத்தில் "மதச்சார்பற்ற அரசு" என்பது பொறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தஅரசு இந்துக்களுக்கு மட்டுமே சேவைசெய்கிற அமைப்போடு எப்படி கை கோர்க்கலாம் ? ஏற்கெனவே மலேசியாவில் ஒரு தனியார் அமைப்பிறகு இந்திய அரசின் ஆதரவு தரப்பட்டதை சுட்டிக் காண்பித்து கண்டித்தார் தோழர் யெச்சூரி. அதை வாபஸ் பெறுவ தாக நல்லபிள்ளை போல அறிவித்த அரசு அதே வேலையை இன்னும் தீவிரமாக அமெரிக்காவில் செய்கிறது. இவர்கள் திருந்த மாட்டார்கள். ராமலிங்கம் கதிரேசன் ( பேராசிரியர் அருணன்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக