புதன், 22 ஜூன், 2016

அண்ணா பல்கலைக் கழகத்தில் கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி.. தொழிற்நுட்பங்கள் யாருக்காக?;

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொட்டிக்கு பெயிண்ட் அடிப்பதற்காக தீபன் சங்கர், ரமேஷ் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். அப்போது அங்கு விஷவாயு தாக்கியதால் 2 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
புகழ்பெற்ற தொழிற்நுட்ப வல்லுநர்களை, தொழிற்நுட்பங்களையும் உருவாக்கும் தமிழகத்தின் முன்னணி தொழிற்கல்வி கூடமான அண்ணா பல்கலைக்கழகத்தில் அடிப்படையான பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட இல்லாமல் தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
தொழிற்நுட்பம் என்பது மேலே இருப்பவர்களுக்கான என்பது சமூகத்தின் அடித்தள மக்களுக்கு எந்த வகையில் சென்று சேரவில்லை என்பதை பல்கலைக் கழக வளாகத்துள் நடந்திருக்கும் இந்த மரணங்கள் உறுதிசெய்திருக்கின்றன. கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டுவந்த பிறகும் கழிவு நீர்த் தொட்டி மரணங்கள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.thetimestamil.com

கருத்துகள் இல்லை: