
இன்று அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 13 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்வர் சித்தராமையாக மேற்கொண்ட மாற்றங்களுக்கு கட்சியின் மேலிடத்தில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தன்வீர் சேட், காகோடூ திம்பப்பா, ரமேஷ் குமார், பாசாவராஜ் ராயன் ரெட்டி, எச்.ஒய்.மீடி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன, எம்.ஆர். சீத்தாராம், சந்தோஷ் லாட் மற்றும் ரமேஷ் ஜார்கோலி ஆகியோர் காபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரியங் கார்கே, ருத்ரப்பா லாமணி, ஈஸ்வர் காந்த்ரே மற்றும் பிரமோத் மாதவரா ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்களுக்கு ராஜ் பவனில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் வாஜ்பாய் வாலா பதவிப்பிரமானம் செய்துவைக்கவுள்ளார் dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக