நேற்று
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா
கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஆளுநர் ரோசய்யா உட்பட பலர் இதில்
பங்கேற்றுள்ளனர். கேரளாவில் அரசு சார்பில் நேற்று யோகா தினம்
கடைப்பிடிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில், அம்மாநில சுகாதார அமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவருமான சைலஜா பங்கேற்றார்.
அப்போது, நிகழ்ச்சி தொடங்கும்முன்னர் சொல்லப்படும் ஸ்லோகம் சமஸ்கிருதத்தில் இருந்ததற்கு அமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, "நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. பல்வேறு மதத்தைப் பின்பற்றும் மக்கள் இந்த நிகழ்வில் பங்கெடுப்பார்கள். இதில், சமஸ்கிருத ஸ்லோகங்கள் பயன்படுத்தக்கூடாது. யோகாவின்போது அவரவர் மதம்சார்ந்த ஸ்லோகன்கள்தான் மனதை ஒருமுகப்படுத்த முடியும்" என்று கூறியுள்ளார் . பின்னர், அரசின் நிகழ்ச்சி நிரலில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் பயன்படுத்துவதற்காக அதிகாரிகள் கொடுத்த பட்டியலையும் அமைச்சர் நிராகரித்துள்ளார். minnambalam.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக