சனி, 11 ஏப்ரல், 2015

இளங்கோவன் : சொத்துக்குவிப்பு வழக்கோ, ஊழல் வழக்கோ என் மீது இல்லை!

அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமியை குற்றம் சாட்டியதற்காக தன் மீது மான நஷ்டஈடு வழக்கு போடப்பட்டிருப்பதன் மூலம் தான் முன்பு கூறிய 14 குற்றச்சாட்டுகளும் உண்மை என்பதை அதிமுக அரசு ஒத்துக்கொள்கிறதா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தங்க சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி நடைபெறாமல், ஊழல் மட்டுமே நடைபெறுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றத்தில் இருந்து தமிழக அரசு மீது எல்லா விளக்கங்களுளோடு 15 ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளேன். அப்படி இருக்கும்போது அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமான சேலம் குடோனில் பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது கூறிய குற்றச்சாட்டுக்கு மட்டும் மான நஷ்டஈடு வழக்கு போடப்பட்டிருப்பதால், முன்பு கூறிய 14 குற்றச்சாட்டுகளும் உண்மை என்பதை அதிமுக அரசு ஒத்துக்கொள்கிறதா.
என் மீதான வழக்கு மக்கள் போராட்டத்திற்கான குற்றச்சாட்டுக்களை கூறுவதால் தொடரப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கோ, ஊழல் வழக்கோ என் மீது இல்லை. தமிழகத்தில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு சதுர அடிக்கு 50 ரூபாயை சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சமாக பெறுகின்றனர். இவ்வாறு பேசினார்nakkheeran.in

கருத்துகள் இல்லை: