புதன், 8 ஏப்ரல், 2015

பணம் வாங்க வற்புறுத்தியது அமைச்சர் அக்ரிதான்: தலைமை பொறியாளர் செந்தில் வாக்குமூலம் or ஆப்பு !

உங்கள் விருப்பப்படியே நியமனம் செய்து கொள்ளுங்கள். ஆனால், ஒரு நியமனத்துக்கு, தலா, 1.75 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்து விடுங்கள். இது மேலிடத்து உத்தரவு' என்றார். 'மேலிடத்து உத்தரவு' என்று சொன்னதால், என்னால் மீற முடியவில்லை.
முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியிடம் இருந்து பணம் வாங்கச் சொல்லி வற்புறுத்தியதாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், வேளாண் துறையின் தலைமை பொறியாளர் செந்தில் தெரிவித்து உள்ளார்.நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும், தலைமைப் பொறியாளர் செந்திலை யும் கைது செய்தனர்.தலைமைப் பொறியாளர் செந்தில், நடந்தவை குறித்து, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.  மேலிடம்னா யாரு? இருக்கறது ஒரே குடும்பம் தானே? அம்மா சின்னம்மா? ஒரு சமயம் பன்னீர் செல்வம் கூறிய வார்த்தை " அதிமுக காரர்களுக்கு சுய சிந்தனை சுயமான செயல் எதுவும் இல்லை எல்லாம் அம்மா வழிகாட்டுதல் தான் என்றார்...ஊழலுக்கு மட்டும் இந்த அடிமைகளா
அந்த வாக்குமூலம் எழுத்து வடிவிலும், வீடியோ பதிவாகவும் போலீசாரிடம் உள்ளது.ஆட்கள் தேர்வு:அந்த வாக்குமூலத்தில், செந்தில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம், தமிழகம் முழுவதும் வேளாண் பொறியியல் துறையில், 119 டிரைவர் காலி பணி இடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தவர்களில், பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியலை தயார் செய்தேன்.அப்போது, வேளாண் துறை அமைச்சராக இருந்த, அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னை அழைத்தார். '119 காலி பணி இடங்களில் நான் சொல்லும் நபர்களைத் தவிர மற்றவர்களை, உங்கள் விருப்பப்படியே நியமனம் செய்து கொள்ளுங்கள். ஆனால், ஒரு நியமனத்துக்கு, தலா, 1.75 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்து விடுங்கள். இது மேலிடத்து உத்தரவு' என்றார். 'மேலிடத்து உத்தரவு' என்று சொன்னதால், என்னால் மீற முடியவில்லை. தமிழகம் முழுவதும் இதை சொன்னேன். எல்லா மாவட்டங்களிலும் பிரச்னையில்லாமல், பணம் வசூலித்தனர். ஆனால், நெல்லையில் மட்டும் பிரச்னையானது.

ஒப்புதல்:

'நெல்லை மாவட்ட வேளாண் பொறியியல் துறையில், காலியாக இருந்த ஏழு டிரைவர் பணி இடங்களுக்கும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், ஏழு தகுதியான நபர்களை தேர்வு செய்து விட்டோம். மாவட்ட கலெக்டர் கருணாகரனும் அதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார்' என்று உதவிப் பொறியாளர் முத்துக்குமாரசாமி கூறினார்.'மேலிட உத்தரவு என சொல்லி, அமைச்சர் பணம் கேட்டிருக்கிறார். எப்படியாவது, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் வசூல் செய்து கொடுத்து விடுங்கள்' என, எச்சரிக்கையாகவே சொன்னேன். ஓய்வு நெருக்கத்தில் இருப்பதால், முத்துக்குமாரசாமி பயப்பட ஆரம்பித்தார்.இதற்கிடையே, சென்னையில் வேளாண் துறை பொறியாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு வந்த முத்துக்குமாரசாமி, பணம் கொண்டு வரவில்லை. கேட்டபோது, முத்துக்குமாரசாமியிடம் இருந்து சரியான பதில் இல்லை. அதை அப்படியே, முன்னாள் அமைச்சர் அக்ரியின் கவனத்துக்கு எடுத்து சென்றேன்.

இதற்கிடையே, அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டதால், நானே முத்துக்குமாரசாமி யிடம், மூன்று தடவை மொபைல்போனில் பேசினேன். இந்த நெருக்கடியில் இருந்த முத்துக்குமாரசாமி, கடந்த பிப்., 20ம் தேதி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை, நெல்லை மாவட்ட வேளாண் பொறியியல் துறையில் கூடுதல் உதவிப் பொறியாளராக இருக்கும் வெள்ளையன் சொன்னபோது பதறினேன்.

மறுப்பு:

முத்துக்குமாரசாமி குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதற்காக, வேளாண் துறையினரை, அவர் வீட்டுக்கு அனுப்பினேன். முத்துக்குமாரசாமி குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுப்பதற்காக, குடும்பத்தாரிடம் மனு எழுதி கொடுக்க கேட்டுக் கொண்டேன். ஆனால், முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.அமைச்சர் சொன்னதை செய்தேன்; ஆனால், பதற்றத்தில் முத்துக்குமார சாமி உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார். இவ்வாறு, அந்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.ஆனால், தன் வாக்குமூலத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இதை முழுமையாக மறுத்துள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: