வெள்ளி, 6 மார்ச், 2015

ஒரு கற்பழிப்பு குற்றவாளிக்காக BBC ஆவணப்படத்தை தடை செய்த அரசு! உண்மையை சொல்றானே?

தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
இந்த சம்பவம் இந்திய சமுகத்தின் அவல நிலையைத்தான் வெளிகாட்டி உள்ளது. இந்த படத்தை தடுப்பதன் மூலம், இந்த அவலத்தை நீக்கி விட முடியாது. நேற்றே இதை நான் எழுதி இருந்தேன். ஆனால் பிரசுரிக்கப்படவில்லை. இன்று தந்தையே சொல்லி உள்ளார். பாதிக்கப்பட்டவரை குறை சொல்வது தான் இந்திய சமுகத்தின் லட்சணம். இப்போதும் இன்னும் நாலு பேர், உங்கள் பெண்ணை ஒழுங்காக வளர்த்து இருந்தால், ஏன் அந்த ஆண் நண்பரோடு ஊர் சுற்றினாள்? என்று இழித்து பேசும் சமுகம் தான் நமது சமுகம். இந்தியா ஒன்றும் சவுதி அரேபியா அல்ல. இங்கு ஆணிற்கு உள்ள சுதந்திரம் பெண்ணிற்கும் உண்டு. பெண்ணை சமமாக மதிக்காத நாடு ஒருபோதும் உருப்படாது. அந்த பெண், அவளது கணவனோடு சேர்ந்து சென்று இருந்தால் கூட, இந்த கயவாளிகள் இதைதான் செய்து இருப்பார்கள். ISIS பயங்கரவாதிகள் கொலை செய்வதற்கும் கற்பழிப்பிற்கும் காரணத்தை தேடி கடைசியில் மதத்தை காட்டுவார்கள். இந்த கயவாளிகளும் பழியை, நமது சமுகத்தை பின்பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே போட்டுள்ளனர். அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பப்புக்கு செல்லும் பெண், அல்கஹோல் அருந்தும் பெண், ஆண்களுடன் செல்லும் பெண், கவர்ச்சி உடைகளை போடும் பெண், இரவில் செல்லும் பெண் என அனைவரும் கெட்டவர்களே என்று எண்ணும் சமுகம் தான் நமது இழிவான சமுகம். இதற்கு முன், வேலைக்கு போகும் பெண், தனியாக தைரியமாக செல்லும் பெண்களையும் இப்படிதான் ஏசினோம். ஆனால் இன்று IT வேலைக்கு சென்று ஐம்பதாயிரம் சம்பாதிப்பதால், அதை நிறுத்தி விட்டோம். பயந்த சுபாவம் உள்ள முழு ஆடை அணிந்த இந்த சமுகம் சுட்டி காட்டும் நல்ல பெண்களையே பெரும்பாலும் இந்த கயவாளிகள் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது கற்பழித்துள்ளனர். மனிதன் தவறு செய்ய முழு முதற் காரணம், மாட்டி கொள்ள மாட்டோம் என்ற சந்தர்ப்பம் சூழ்நிலை தான். அந்த சூழ்நிலை நிகழும் வரை, தயவு செய்து இனிமேலும் பாதிக்கபட்டவரையே குற்றம் சொல்லாதீர்கள். இதைதான் அரசியல்வாதிகள் செய்தார்கள், சாமியார்கள் செய்தார்கள். அதையே மக்களாகிய நாமும் செய்ய கூடாது. dinamalar.com

கருத்துகள் இல்லை: