வெள்ளி, 6 மார்ச், 2015

டெல்லி BBC பேட்டிக்கு 40 ஆயிரம் வாங்கிய குற்றவாளி முகேஷ் சிங்! முதலில் இரண்டு லட்சம் கேட்டானாம்!

இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.–4 குழுவினர் இந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில் முகேஷ் சிங்கிற்கு பேட்டி எடுக்க லெஸ்லீ உத்வின் ரு 40 ஆயிரம் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பல முறை முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க உத்வின் முயன்று உள்ளார் ஆனால் முடிய வில்லை.அவருக்கு பேட்டி எடுக்க உதவியவர் முல்லர் என்பவர் ஆவார். பின்னர் உத்வினுக்கு திகார் சிறைச்சாலையில் முகேஷ் சிங்கை சந்தித்து பேட்டி எடுக்க மத்திய உள்துறை அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. முதலில் இந்த் பேடி எடுக்க முகேஷ் சிங் ரூ. 2 லட்சம் கேட்டு உள்ளான். பின்னர் அது பேரம் பேசப்பட்டு ரூ40 ஆயிரம் வழங்கபட்டு உள்ளது.அவன் 40 ஆயிரத்திற்கு பேட்டி கொடுக்க சம்மதம் தெரிவித்ததும் உடனடியாக அவனை சந்தித்து பேட்டி எடுக்க அனுமதி கிடைத்து உள்ளது. குற்றவாளி முகேஷ் சிங்கின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டு உள்ளது. பின்னர் அவரது குடும்பத்தினர் அந்த பணத்தை எடுத்துள்ளனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: