
ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை ஒட்டி அத்வானி கலந்துகொண்ட அஞ்சலி கூட்டத்தில் மிக காட்டமாக பேசி பா.ஜ.க தொண்டர்களிடம் கைதட்டலை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்.சேலம் ஜவஹர் மில் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசியவர், “ஆடிட்டர் ரமேஷ் மிகவும் அன்பானவர். யாருக்கும் எந்த தீங்கும் இளைக்காதவர். இந்து மத மேம்பாட்டிற்காக உழைத்தவர். அந்த உத்தமரை தான் அப்படி சிதைத்துள்ளனர். சிதைத்தது கூலிபடையோ,தீவிரவாத படையாகவோ இருக்கலாம்.ஆனால் உங்களை எங்கள் காவிப்படை விட்டுவிடாது. அது உங்களை துரத்தி அடிக்கும். அத்வானிஜி கோவை வந்தபோது குண்டு வெடிப்பு,மதுரை வந்தபோது பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு சேலத்திலும் வெடிகுண்டு பீதி. இவைகளை தாண்டி அவர் தைரியமாக வர காரணம் நம் மீது வைத்திருக்கும் பாசம்.எங்கள் கட்சி ரத்தத்தை வேரில் விட்டிருக்கிறது. நாங்கள்தான் உண்மையான மதசார்பற்ற கட்சி. பெங்களூரில் கட்சி அலுவலகம் முன் குண்டு வைக்கப்பட்டு இருக்கு. குற்றவாளி தமிழகத்தில் கைது செய்யபடுகிறான். குண்டு வைக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.
ஆர்.எஸ்.எஸ்
விளம்பரம் இல்லாமல் ரத்த தானம் செய்யும் இயக்கம். எங்கள் ரத்தத்தை நீங்கள்
பார்க்க நினைத்தால் அதையே நாங்கள் பதிலாக தருவோம். எங்கள் மீது கை
வைத்தால் நாங்களும் கை வைப்போம். நாங்கள் கத்தி கத்தியும் பேசுவோம். கத்தி
வைத்துக்கொண்டும் பேசுவோம். ஆடி போகவில்லை நாங்கள். விஸ்வரூபம்
எடுத்துள்ளோம். ஆட்சியை பிடிப்பதே ஆடிட்டர் ரமேஷிற்கு நாம் செய்யும்
உண்மையான அஞ்சலி.
மகாபாரத்தில்
ஒரு கதை வரும். கண்ணனின் தேரில் எதிரிகள் வீசிய பல அம்புகள் குத்தி
இருக்கும். அதில் இருந்து கண்ணன் இறங்கினால் அந்த தேர் எரிந்து போய்விடும்.
அப்படி கண்ணனை போல தான் பா.ஜ.க.தேரை போல நம் பாரதம். எங்கள் மீது கத்தி
வீசியவர்களை விரட்டுவோம். ஓட ஓட விரட்டுவோம். பாரத தேசத்தை காவி படை
தேசமாக மாற்றாமல் ஓயமாட்டோம்’ என்றார் மிக காத்திரமாக.
அவர் பேசிய ஒவ்வொரு பேச்சிற்கும் பலத்த கைத்தட்டல் வந்தது. சில நேரம் மழை பொழிந்தது அங்கு. ஆனாலும் களைந்து போகாமல் கேட்டனர்.
- இளங்கோவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக