வியாழன், 1 ஆகஸ்ட், 2013

தாலிக்கு தங்கம் வேண்டாம்! தாலியை பறிக்காமல் இருந்தால்போதும்! அரசை கண்டிக்கும் பெண்கள்!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே புதியதாக அரசு மதுக்கடை
திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பொதுமக்கள் திரண்டு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டத்தைத் தொடர்ந்து, அந்த மதுக்கடைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. குளச்சல் அருகே இரும்புலி என்ற இடத்தில் ஏற்கனவே ஒரு மதுக்கடை உள்ள நிலையில், இதன் அருகிலேயே மேலும் ஒரு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையம், வழிப்பாட்டுத்தலம் அருகே உள்ள இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது, ஆண்கள் நிறைய பேர் குடிக்கின்றனர். வீட்டிற்கு வந்து பணம் இருந்தால் பிடிங்கிக்கொண்டு போய் மீண்டும் குடிக்கின்றனர். பெண்களாகிய நாங்கள் வேலைக்கு போய் சேர்த்து வைத்த பணத்தை பறிக்கின்றனர். எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை. எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. இளம்பெண்கள் நிறைய பேர் மாப்பிள்ளைகளின் குடிவெறி தாக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குடியால் உடல்நிலை பாதிக்கப்பட்டு கணவன்களை இழந்து இளம்பெண்கள் நிறையபேர் விதவைகளாக வாழ்கின்றனர். எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் அனைவரையும் இந்த அரசு கொன்றுவிட்டு, பிறகு மதுக்கடைகளை திறக்க வேண்டும். ஆண்கள் மட்டும் வாழ்ந்தால் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு வராது என்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப் ஆகியோர் கூறுகையில், மதுக்கடையை திறந்து மாணவச் செல்வங்களை அழிப்பதோடு, பெண்களுக்கு வன்கொடுமை நடப்பதற்கு முடிசூட்டும் விதமாக மதுக்கடையை புதிதாக திறந்திருப்பது கண்டிக்கத்தக்கது. தாலிக்கு தங்கம் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. மதுக்கடையை திறந்து தாலியை பறிக்காமல் இருந்தால்போதும் என்று பெண்கள் கண்ணீருடன் கோரிக்கை வைக்கின்றனர். மதுக்கடையை திறந்து மக்களை சீரழிக்க வேண்டாம் என்றனnakkheeran.in

கருத்துகள் இல்லை: