

ஹீரோ வீசிய கத்தி அனுஷ்காவை பதம் பார்த்த ராணி
ருத்ரம்மா தேவி
.வேட்டைக்காரன், ‘சிங்கம் உள்ளிட்ட
பல்வேறு படங்களில்
நடித்திருப்பவர் அனுஷ்கா. இவர் தற்போது தெலுங்கில் உருவாகும் ‘ராணி
ருத்ரம்மா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குணசேகர்
இயக்குகிறார். அனுஷ்கா, ராணி வேடம் ஏற்றிருப்பதால் அவரே சண்டை காட்சிகளில்
நடிக்க வேண்டி இருந்தது. இதற்காக பயிற்சி பெற்று டூப் இல்லாமல் அவரே
நடிக்கிறார். ஹீரோ மகேஷ் பாபு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். மகேஷ்பாபுவும்,
அனுஷ்காவும் மோதும் சண்டை காட்சி

சமீபத்தில் படமாக்கப்பட்டது. தொலைவில்
நின்றபடி அனுஷ்கா மீது மகேஷ்பாபு கத்தி வீச, அந்த கத்தி தன்னை தாக்காமல்
அனுஷ்கா தப்பிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. காட்சிப்படி கத்தியை வீசிய
போது அவர் விலக தாமதமானதால் கத்தி அனுஷ்கா மீது பாய்ந்தது. இத்தனைக்கும்
அந்த கத்தி கார்ட் போர்டால் செய்யப்பட்டிருந்தது. இதில் அனுஷ்காவுக்கு
லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டாக்டரிடம் சென்று சிகிச்சை
பெற்றார். இந்த சம்பவத்தால் ஷூட்டிங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக