புதன், 7 மார்ச், 2012

வங்கதேத்தில் சவூதி தூதர் சுட்டுக்கொலை

டாக்கா: வங்கதேசத்தில், சவூதி அரேபியா நாட்டின் தூதர் , நடந்து சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். வங்கதேச நாட்டிற்கு சவூதி அரேபியா பலவழிகளில் பெருமளவு நிதி அளித்து வழங்கிவருகிறது.இந்நிலையில் சவூதி அரேபியா தூதர் காலிஃப் அல்-அலி, 43 என்பவர் நேற்று தனது வீட்டிலிருந்து மாலை நடைபயிற்சிக்காக சென்றார்.
வீட்டிலிருந்து சில அடி தூரம் சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவன் துப்பாக்கியால் தூதரை சுட்டுவிட்டு தப்பியோடிவி்ட்டதாக போலீசார் தெரிவித்தனர். நெஞ்சில் குண்டுகாயமடைந்த தூதரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முன்பே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையி்ல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சவூதியி்ல், 8 வங்கதேசத்தினர், கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர். சவூதி தூதர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன.

கருத்துகள் இல்லை: