சனி, 10 மார்ச், 2012

பலுசிஸ்தான் உருவாக்கம் இந்தியா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானத்தை பிரித்து தனிநாட்டை உருவாக்கினால் மிக மோசமான விளைவுகளை இந்தியாவும் அமெரிக்காவும் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜமாத்-உத்-தவா எச்சரிக்கை விடுத்துள்ளது.
2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்திய அமைப்பு ஜமாத்-உத்-தவா.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 40க்கும் மேற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் கூட்டுக் கூட்டத்தில் ஜமாத்-உத்-தவாவின் தலைவர் ஹபீஸ் சையத் பேசியதாவது:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு இன்னும் என்ன வேலை? பலுசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து பிர்க்க முயற்சிக்கிறீர்களா?
எங்கள் நாட்டு விவகாரங்களில் நீங்கள் தலையிட முடியாது.. இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நாங்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம். பலுசிஸ்தான் தனிநாட்டை உருவாக்கும் முயற்சிகளை உடனே கைவிடுங்கள். இல்லையெனில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
லஸ்கர்-இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனறும் சயீத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது

கருத்துகள் இல்லை: