ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

வன்னி மக்கள் நிர்ப்பந்தத்தின் பேரில் போரைச் சுமந்தவர்கள்


murugesuமுள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தை அனுபவத்த எவனும் தமிழனை மீண்டும் ஓர் யுத்தத்திற்கு இட்டுச் செல்லமாட்டான். அந்த வலியும்; வேதனையும் வன்னி மக்களுக்குத்தான் தெரியும். அவர்கள்தான் இறுதிவரை போரைச் சுமந்தவர்கள். வேறு எவருக்கும் அதைப்பற்றிக் கதைப்பதற்கே அருகதை கிடையாது.'
ஆதங்கம் மேலிட்டாலும் நிதானமாய் சொல்கிறார் ஆரியகுட்டி முருகேசு. முன்னாள் போராளிகள் இருவரின் தந்தை. பல தசாப்தம் ஆசிரிய தொழில் புரிந்து ஓய்வு பெற்றவர். இயக்கச்சி பிறப்பிடம். வன்னி, யாழ்ப்பாணம் எனப் பல காலம் அங்கு மிங்கும் மாறி மாறி பணியாற்றியிருக்கிறார். ஓர் ஊடகத்துறையாளன், சிந்தனாவாதி என்றெல்லாம் சொல் லலாம். 1960களில் தினகரன் பத்திரிகையின் நிருபராகக்கூடக் கடைமை யாற்றியிருக்கிறார். இன்று அந்தத் தினகரனை வெளியிடும் நிறுவனத்திலிருந்தே மனந்திறக்கிறார்.
விரும்பியோ விரும்பாமலோ கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மக்கள்தான்; போரைச் சுமந்தவர்கள். அ/து அவர்களின் நிர்ப்பந்தம். போரிலிருந்து அவர்களை அன்னியப்படுத்த முடியாது. அங்கு எல்லோரும் விடுதலைப் புலிகளாகத்தான் இருந்தார்கள். இல்லை என்று சொல்ல முடியாது. இன்று எவராவது வந்து நான் அதில் சம்பந்தப்படவில்லை, எனக்குத் தெரியாது என்று சொன்னால் அவரை நம்ப முடியாது. வன்னியில் உள்ள எல்லாக் குதிரையும் ஓடித்தான் ஆக வேண்டும் என்று பிரபாகரன் ஒரு கருத்தைச் சொன்னார். அதுபோலவே நடந்து வந்தது” என்று சொல்லும் முருகேசு அரசாங்கப் படைகளுடனான இந்தப் போர் தோற்றுப் போனதற்கு வன்னி மக்கள் காரணம் அல்ல என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.
புலிகளைப் பொறுத்தவரை ஒரு தந்திரோபயமான அரசியலை நடத்தி வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் என்ன செய்தாலும் அவர்களின் உதவி தேவை. தொழில், வாழ்வாதாரம், நிர்வாக இயந்திரம் எனப் பல துறையுமே புலிகளில் கட்டுண்டு கிடந்தது. ஆகவே மக்கள் அவர்களை நம்பியே ஆகவேண்டும்”
முருகேசுவின் இரண்டு மகள்மார் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள். இன்று இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். மூத்த மகள் யாழ் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது தாமாக இயக்கத்தில் இணைந்தவர். மற்றைய மகள் உயர் தரம் கற்றுக் கொண்டிருந்தபோது 1994 ஆம் ஆண்டு பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டவர். அவருடன் முழு வகுப்பு மாணவர்களுமே கொண்டு செல்லப்பட்டவர்கள்.

போரைச்; சுமக்காதவர்கள் எதனையும் சொல்லலாம். வெளிநாட்டில் உள்ளவர்கள் பணத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் வேதனையைச் சுமக்கவில்லை. இன்று வேட்டியை மடித்துக் கட்டுவோம் என்று சொல்பவர்களை நம்ப முடியாது. அ/து அவர்களின் சுயலாப அரசியல். புலிகள் இயக்கத்;தைத் தவறாக வழிநடத்தியதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் புத்தி ஜPவிகளுக்கும் பெரும் பங்குண்டு. பத்திரிகைகள் பத்திரிகா தர்மத்தின்படி செயற்பட வில்லை. புத்தி ஜPவிகள் புலிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்லவில்லை.
  • ஆலோசனை சொன்னால்தான் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே. புலிகள் இயக்கத்தினருக்கு ஆலோசனை சொல்லப்போய்´. உயிரைவிட வேண்டி வரும் என்று அவர்கள் நினைத்திருந்தால்..?

“இல்லை. புலிகள் இயக்கத் திற்கு மிக நெருக்கமாகப் பலர் இருந்தார்கள். எனக்குத் தெரிய பேபி சுப்பிரமணியத்துடன் மிக நெருக்கமாகப் பல பேராசிரியர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் எந்த ஆலோசனையையும் சொல;லவில்லை. ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி மட்டும் பிரபாகரனுக்குக் கொடுக்கும்படி என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்தார். ஜனாதிபதியுடன் கதைத்து யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதாகச் சொன்னார். நான் அந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் யோகியிடம் கொடுத்தேன். அவர் அதனைச் சரியாகப் படிக்கவில்லை. ஆனால், வே.பாலகுமாரன் மாத்திரம் முழுமையாகப் படித்துவிட்டுக் கவலை பட்டார். தமக்கு விடயம் புரிகிறதென்றும் ஆனால், கடிதத்தி;ல் உள்ளதைச் சொன்னால் தாம் துரோகிகள் பட்டியலுக்கு வந்துவிட நேரிடும் எனச் சொன்னார்”
  • போரின் இறுதிக் கட்டம் வரை சென்றதாகக் கூறினீர்களே.. அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?”
“2009 மே 16 ஆம் திகதி மிகவும் மோசமான நாள். அந்த நாளை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இன்று தமிழ் மக்களுக்காகவே அரசியல் செய்கிறோம் என்று சொல்பவர்கள் எவராக இருந்தாலும் அன்றைய தினத்தின் காட்சிகளைப் பார்த்திருந்தால், இனியொருபோதும் தமிழ் மக்களைப் போருக்குத் தள்ளமாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கனகரத்தினத்தைத் தவிர வேறு எவருக்கும் தகுதியில்லை. கூட்டமைப்பினர் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் என்றால் களத்தில் மக்களுடன் மக்களாக இருந்திருக்க வேண்டும். இன்று சர்வதேசம் கண்ணீர் உண்மையானது அல்ல. 15,20 நாள் உச்சப் போர் நடக்கிறது. புலம ;பெயர் தமிழர்கள் நினைத்திருந்தால்.. புலிகளையும் அரசாங்கத்தையும் ஒரு வழிக்குக் கொண்டுவந்திருக்கலாம். இன்று அழிவின் புதைகுழிக்கு மேலிருந்துகொண்டு இலாபம் தேடுவது நியாயமல்ல. புலிகள் தந்திரோபாய போரை நடத்தவில்லை. அவர்கள் அரசாங்கத்தின் பொறிக்குள் வீழ்ந்துவிட்டார்கள். இல்லையென்றால்.. வெட்ட வெளிப் பகுதிக்குச் சென்று அழிவைத் தேடியிருப்பார்களா? அப்படியென்றால் ஏதோ பின்னணி நம்பிக்கையில்தான் அப்படிச் செய்திருக்க வேண்டும். யாரையோ நம்பி ஏமாந்திருக்கிறார்கள். அவர்களிடம் போர் தந்திரம் என்றொன்று இருக்கவில்லை. மே 15ஆம் திகதி மக்களைக் காப்பாற்றிக்கொண்டுபோக கப்பல் வருகிறதென்றும் அதனால், வட்டு வாகல் வரும்படியும் சொன்னார்கள். ஆனால் அங்குப் போனால் எதுவும் நடக்கவில்லை. இரண்டு அருட்தந்தைமாரும் இருந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் தப்பி வந்திருக்கலாம். ஆனால், நாம் மேய்ப்பர்கள் என்றும் அதனால், மந்தைகளைவிட்டுவிட்டுச் செல்லமாட்டோம் என்று அங்கேயே தங்கிவிட்டார்கள்”.
  • நீங்கள் எப்படி வந்தீர்கள்?”
அங்கும் இங்கும் அலைந்து குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் தவித்தோம். அதனால் எனக்கு சிறுநீர் பிரச்சினை ஏற்பட்டு வருத்தம் வந்துவிட்டது. பதினாறாந் திகதி முகாமுக்கு வந்ததும் விடயத்தை இராணுவத்திற்குச் சொன்னேன். அவர்கள் என் நலையைப் புர்pந்துகொண்டு உடனடியாக என்னை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சத்திர சிகிச்சை செய்தார்கள். பின்னர் தான் முகாமிலிருந்த குடும்பத்துடன் இணைந்தேன்.
  • அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும். இதில், அரசாங்கத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
“மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். தீர்வொன்றை முன்வைத்து மக்கள் முன் வரவேண்டும். ஏனெனில் மக்களிடம் இனி எதிர்ப்பு அரசியல் எடுபடப்போவதில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு தீர்வை முன்வைக்காமல் ஏன் காலத்தை இழுத்தடிக்கிறது என்று தெரியவில்லை. சிலவேளை அவர்கள் முன்வைக்கும் தீர்வை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால், மக்கள் இவர்களை நிராகரித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள்போலும். மக்கள் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும். புலிகள் இருந்தபோது வேலை வாய்ப்பு இருந்தது. பாரிய பண்ணைகள் இருந்தன. ஒரு தன்னிறைவான உற்பத்தி இருந்தது. தென்கிழக்காசியா விலேய மிகப் பெரிய ஆலை இருந்தது. ஆகவே அனைவருக்கும் தொழில் இருந்தது. அந்த நிலை இன்றில்லை. அதனை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும். பாதை, மின்சாரம், வைத்தியசாலை என்பன வருகிறதே என்று கேட்டால், அ/து அரசின் கடமையல்லவா. எமக்கு முக்கியம் எமது வாழ்வா தாரம் என்று மக்கள் சொல்கிறார்கள். எனவே மக்களின் ஆதங்கத்தைத் தீர்க்க வேண்டும். தென்னிலங்கையைப் போன்ற நிர்வாக இயந்திரம் வடக்கில் இல்லை. எங்கும் ஒருவித துரைத்தனம் மேலோங்கி காணப்படுகிறது மக்களே எஜமானர்கள் என்ற போக்கு உருவாக வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லும் முருகேசு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்'வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெருகி வருவதாகச் சொல்கிறார்.
1960களில் என்.எம்.பெரேரா போன்றோருக்குச் செல்வாக்கு இருந்ததைப் போல், இப்போது நாமல் ராஜபக்'வுக்கு இருக்கிறது. தந்தைக்குப் பின் அவரை வைத்து மக்கள் பார்க்கிறார்கள்.”
  • வன்னி மக்கள் சிங்களத் தலைமையொன்றை ஏற்று அங்கீகரிப்பார்கள் என்று நம்பிக்கைகொள்ள முடியுமா?”
நிச்சயமாக. மக்கள் மத்தியில் அப்படியொரு பேதம் கிடையாது. அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொடுப்பவர் யார் என்றுதான் பார்க்கிறார்கள். நாமல் அண்ணா என்று அழைக்கும் அளவுக்கு இளையவர்கள் மாறி யிருக்கிறார்கள். எனவே இந்த நிலையைப் பயன்படுத்தி மக்களுக்கு மாற்றுத் தலைமைத்துவமொன்றை வழங்க வேண்டும்” என்று கூறுகிறார் இந்த சமத்துவ சமுதாய அரசியல்வாதி.
- தினகரன் வராமஞ்சரி

கருத்துகள் இல்லை: