புதன், 27 ஜூலை, 2011

தலைமை தபாலக கிணற்றுக்குள் கட்டுகட்டாக அஞ்சல்அட்டைகள்


தலைமை தபால் அலுவலக கிணற்றுக்குள்
கட்டுகட்டாக அஞ்சல்அட்டைகள்
தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோட்டில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இருக்கும் கிணறு கடந்த சிலநாட்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அப்போது அதில் கட்டுக்கட்டாக அஞ்சல் அட்டைகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தலைமை தபால் நிலைய அதிகாரி, தூத்துக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணை நடத்துமாறு கோட்ட துணை கண்காணிப்பாளர் மகபூப் அலிக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் நேற்று தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
 அப்போது தங்கள் பகுதிக்கு கூடுதல் தபால்கள் வருவதாக காட்டுவதற்கு தபால்காரர்களே எழுதி அனுப்பிய அஞ்சல் அட்டைகள் என்பது தெரியவந்தது. அந்த தபால் அட்டைகளை கிணற்றில் போட்ட தபால்காரர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தூத்துக்குடி தபால்காரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: