திங்கள், 10 மார்ச், 2025

இன்று உலகம் முழுவதும் இசையால் போற்றப்பட்டு கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா

 ராதா மனோகர் : இன்று உலகம் முழுவதும் இசையால் போற்றப்பட்டு கொண்டிருக்கும் திரு இளையராஜா அவர்கள் நம் மண்ணின் பெருமைக்கு உரிய சொத்து!
கலைஞரால் இசைஞானி போற்றப்பட்ட இளையராஜா அவர்கள்  இசை தவிர்ந்த வேறு விடயங்களில் ஒரு வகை அப்பாவி!
இவர் மட்டுமல்ல இசை மேதைகளான கே வி மஹாதேவன் எம் எஸ் விசுவநாதன்  போன்றவர்களும் கூட இசையில்தான்  மேதைகள்.
 ஆனால் வேறு விடயங்களில் விபரம் குறைந்தவர்கள்தான்
கே வி மஹாதேவன் தெலுங்கிலும் தமிழிலும் கொடிகட்டி பறந்தவர்
இவரின் சாதனைகளை இன்று வரை எவரும் முறியடிக்கவில்லை!
இவர் ஏ பி நாகராஜனோடு சேர்ந்து திரைப்படங்களை தயாரித்தார்.
இவர்கள் தயாரித்த புராணப்படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியது


ஆனால் இருவருமே கடனாளி ஆனார்கள்.
கூட இருந்த மனேஜர்களை நம்பி சொத்துக்களை பறிகொடுத்த அப்பாவிகள்

எம் எஸ் விசுநாதன் பாடல் சிடிக்கள்தான் இன்றும் அதிகமாக விற்கப்படுகிறது
இதை எனக்கு ஒரு சி டி விற்பனையாளர் முன்பு கூறினார்.
இவரின் பாமரத்தன்மையை பற்றி இவரின் ரஷ்ய பயணத்தின் போது  கவிஞர் கண்ணதாசன்  வேடிக்கையாக கூறியிருக்கிறார் .. இவனுக்கு உலகில் ஒன்றுமே தெரியாது ஆனால் இசையில் இவனுக்கு தெரிந்த அளவு வேறு ஒருவருக்கும் தெரியாது !
ரஷ்யாவில் எதை பார்த்தாலும் அல்லது எதை பற்றி கூறினாலும் அப்படீன்னா அப்படீன்னா என்று கேள்விகளால் என்னை துளைத்து விடுவான்
ஒரு மாஸ்கோவில் ஏதோவொரு மீயூசியத்தில் செக்கோவ்ஸ்கி பயன்படுத்திய பியானோ இதுதான் என்று எங்களை அழைத்து வந்த  வழிகாட்டி கூறினார்
அதற்கு இவன் இதை நான் வாசிக்கலாமா என்று கேட்டு விட்டு திடீரென்று பியானாவின் கருப்பு வெள்ளை கட்டைகளை  அழுத்தினான் நாம் எல்லோரும் அதிசயித்து கொண்டிருந்தோம்
இப்போது அவன் பேச தொடங்கினான் இது செக்கோவ்ஸ்க்கியின் tchaikovsky  ஒரு காம்போசிஷன் என்று ஏதோதோ கூறினான்  .
எனக்குத்தான் இது பற்றி ஒன்றும் தெரியாதே  
அமைதியாக நான் கேட்டுக்கொண்டு இருந்தேன்!
பிற்காலத்தில் இந்த ரஷ்ய இசையை காப்பி அடித்து அல்லது இன்ஸபிரேஷனில்தான் சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பத்திய சேத்தி கேட்டோ ( (எதிர்நீச்சல்) என்ற பாடலை கம்போஸ் பண்ணி இருந்தார்
இந்த மூவர் மட்டுமல்ல பல கலைஞர்கள் இப்படி கலையிலேயே மூழ்கி இருப்பார்கள்.
இவர்களுக்கு வேறு விடயங்களை கற்று கொள்ளவோ ஆராய்ந்து பார்க்கவோ நேரம் இருப்பதில்லை!
இவர்கள் நமது மண்ணின் மைந்தர்கள் மண்ணின் சொத்துக்கள்
இவர்களை போற்றுவோம்!   
இவர்களின் இசைக்காக இவர்களை என்றும் போற்றுவோம்
இவர்கள் திராவிட இசையின் திரையிசை தூண்கள் 

கருத்துகள் இல்லை: