![]() |
![]() |
கழுவேற்றிகளின் பௌத்த சமண இனவழிப்புக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ் பௌத்தர்களின் பல அடையாளங்கள் இலங்கையில் உள்ளன!
இந்த வகையில் பருத்தி துறையில் உள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில் பௌத்தர் சிலை பற்றி முன்பே பதிவிட்டிருந்தேன். அது பற்றி பலரும் ஏற்கனவே எழுதியுள்ளார்கள்.
தென்னிந்தியாவில் பார்ப்பன ஆக்கிரமிப்பினால் அடியோடு துடைத்தெறியப்பட்ட பௌத்த சமண சமயங்கள் தற்போது மீழெழுச்சி கண்டு வருகின்றன!
அந்த கோணத்தில்தான் இலங்கை பௌத்ததையும் நோக்க வேண்டும்
12 நூற்றாண்டுவரை கழுவேற்றிகளின் படையெடுப்புக்கள் தமிழ் பௌத்தர்களை துரத்தி கொண்டே வந்துள்ளது.
12 ஆம் நூற்றாண்டில் நிசங்க மல்லா அல்லது கீர்த்தி நிசங்க (இலங்கை - பொலநறுவை கி.பி. 1187–1196 வரை 9 ஆண்டு கால ஆட்சி) மன்னர் காலத்தில்தான் இன்றைய சிங்கள மொழியினை ஆக்கம் இடம்பெற்றது!
பௌத்த மதம் சார்ந்த ஆவணங்கள் மற்றும் இலக்கியங்கள் பார்பனீயத்தின் இடைச்செருகல் மடைமாற்றல்கள் திரிபு சேதாரங்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தோடு நவீன சிங்கள மொழி உருவானது!
பார்ப்பனீயம் மண்ணின் மொழிகளை சிதைத்து அவற்றின் கருவூலங்களை மொழி சிதைவின் மூலம் களவாடிய வரலாறுதான் திராவிட மொழிகளின் பல்வேறு வடிவங்களாகும்!
திராவிட துணைக்கண்டத்தில் துடைத்து எறியப்பட்ட பௌத்தம் இலங்கையில் காலூன்றி தன்னை தக்கவைத்து கொண்டுள்ளது!
சிங்கள மொழியில் ஏராளமான தமிழ் மற்றும் சமஸ்கிருதமாக உருமாறி போன பல திராவிட சொற்கள் சிங்கள மொழியில் அங்காங்கே இருந்தாலும் எந்த ஒரு இந்திய மொழி பேசும் மக்களுக்கும் இலகுவில் புரியாத விதத்தில் ஒரு மறைபொருளாக அது உருவாக்கப்பட்டிருப்பதுதான் அதன் சிறப்பு.
அதனால்தான் அது பௌத்தத்தை தக்கவைப்பதில் வெற்றி பெற்றது.
சிலப்பதிகாரம் குண்டலகேசி மற்றும் பல திராவிட வரலாறுகளை சிங்கள மக்கள் சிங்கள மொழி மூலம்தான் இன்றும் உயிர்த்துடிப்புடன் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்!
சிங்கள மொழியானது தமிழர்களின் திராவிட புத்த வரலாற்று கருவூலமாகும்!
Sinnakuddy Thasan : வடமராட்சி வல்லிபுர பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வல்லிபுரம் கோல்ட் பிளேட் முக்கிய வரலாற்று சாசனம் என்று கூறப்படுகிறது
கண்டெடுக்கப்பட்ட சாசனம் என்று கூறப்பட்டாலும் உண்மையில் இந்த சாசனம் புலோலி பகுதியில் வாழ்ந்த ஒருவரிடம் தான் இருந்ததாம்
அந்த நபருக்கு இது பற்றி தெரிந்திருக்கவில்லை. இதை திருப்பி தருகிறேன் என்று கூறி வாங்கி சென்ற சிங்கள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பரண விதான திருப்பி கொடுக்கவேயில்லையாம்
புகைப்படம் - வல்லிபுரம் கோல்ட் பிளேட்
------------------------------------------------------------
வல்லிபுர பொற்சாசனம்
வல்லிபுரப் பகுதியில் பௌத்த விகாரை ஒன்றின் அழிபாடுகளை 1936 இல் அகழ்வுகள் மூலம் தேடிய போது அங்கு கிடைக்கப்பெற்ற புதைக்கப்பட்ட பேழையில் காணப்பட்ட வல்லிபுரப் பொற்சாசனம் சரித்திர முக்கியத்துவமான சான்றுகளில் ஒன்றாக தமிழ், சிங்கள ஆய் வாளர்களால் கணிக்கப்படுகின்றது
. அத்துடன் புத்தர் சிலையொன்றும் கண்டெடுக்கப்பட்டது. இவ்விரு சாதனங்களும் கி. பி. 4 ம் ஆண்டு காலப்பகுதியில் பௌத்த சமயம் வடபகுதியில் செல்வாக்குப் பெற்றிருந் தமையை உணர்த்துவதேயன்றி சிங்கள மக்களோ சிங்கள அரசோ இருந்தமைக்கான சான்றுகளாகக் கருத முடியாது எனலாம்.
புத்த சமயத்தைத் தழுவிய தமிழர்கள் வாழ்ந்திருந்தமையையே உணர்த்து கின்றதெனலாம். சைவ சமயம் கி. பி. 6 இல் வேகமாகப் பரவுவதற்கு முன் பௌத்த சமயம் சில பகுதியினரிடம் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது வடபகுதியின் பல பகுதிகளிலும் கண்டு பிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள், புத்த சமய எச்சங்கள் காண்பிக்கின்றன.
இத்தகட்டில் பிராமி எழுத்துக்களால் பாளி மொழியில் பொறிக்கப் பட்ட வாசகம் முரண்பாடான விளக்கங்களுக்குள்ளாகியிருக்கின்றது. பேராசிரியர் பரணவிதான இவ்வாசகங்கள் கி. பி. 126 170 காலத்தில் அநுராதபுரத்தை ஆண்ட வசப மன்னன் நாக தீவை ஆண்ட போது அத்தனகல் பகுதியில் கட்டிய விகாரையைப் பற்றி குறிப்பிடுவதாக விளக்கமளித்துள்ளார். இதன் மூலம் சிங்கள அரசு வட இலங்கையில் நிலவியதை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளார். இச்சாசனத்தை ஆராய்ச்சி செய்த கல்வெட்டியலாளர் தானியும் இவர் கருத்துக்களைப் பரிமாறிய வேலுப்பிள்ளையும் பரணவிதானவின் கூற்று ஏற்புடைய தல்லவெனக் குறிப்பிட்டுள்ளனர்.
சாசனத்தில் காணப்பட்டது சிங்கள வரிவடிவல்ல எனவும் வசபன் என்ற மன்னன் பற்றி தகவல் இல்லாமை யும் நாகதீபம் என்பது வடபகுதியை உள்ளடக்கிய பகுதியே என்றும் இதனை வசபன் ஆண்டதாகக் குறிப்புகளில்லை எனவும் பேராசிரியர் சிற்றம்பலம் குறிப்பிடுகின்றார். மேலும் இப் பொற்சாசனத்தில் காணப்படும் 'மகரஜ' வாசகம் இப்பகுதியில் கி. பி. 4ம் நுாற்றாண்டில் அரசாட்சி செய்த அரசனையே குறிப்பிட்டிருக்கின்றதாகவே கொள்ளப்படுகின்றது. பௌத்த மதத்திற்குரிய பிராகிருத (பாளி) மொழியில் ஆந்திரக் கலையம் சங்களைக் கொண்ட இப் பொற்சாசனம் பௌத்தம் பற்றிய சாசனமே யன்றி சிங்கள மொழியையோ சிங்கள அரசனையோ அரசையோ அடையாளப்படுத்தவில்லை என்பதே பல ஆய்வாளர்களின் கருத்தாக அமைகின்றது
. மேலும் இங்கு கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையும் ஆந்திரக் கலைப்பாணியில் அமைந்துள்ளதென பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்" கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி-தம்பு கனகசபை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக