ராதா மனோகர் : இப்போதெல்லாம் நான் சந்திக்கும் ஹிந்திக்காரர்களிடம் உங்கள் தாய் மொழி எது?
மூதாதையர் மொழி எது?
என்றெல்லாம் கொஞ்சம் துருவி துருவி கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்!
பதிலுக்கு அவர்கள் ஏராளமான மொழிகளின் பெயர்களை வரிசையாக சொல்கிறார்கள்!
நீங்களும் கேட்டு பாருங்கள்! வியந்து போவீர்கள்!
முந்தா நாள்கூட ஒரு ஹிந்திக்காரரிடம் மெதுவாக தொடங்கினேன்.
(அவரின் பெயர் விகாஸ்)
அவர் தன் அப்பாவின் அம்மா ஒரு மொழி அப்பாவின் அப்பா வேறு ஒரு மொழி,
தன் அம்மாவின் அப்பாவும் அம்மாவும் கூட வேறு வேறு மொழிகள் என்று என்னென்னவோ மொழிகளின் பெயரை எல்லாம் சந்தோஷமாக அடுக்கினார்.
நான் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன்.
அவர் கூறிய பல மொழிகள் அல்லது வெறும் டயலாக்குகள் எல்லாம் எனக்கு புதிதாக இருந்தன.
ஒரு வேளை அவர் அவற்றை உச்சரித்த பாணி கொஞ்சம் திரிபடைந்து இருக்கலாம்.
அவர் கூறிய அந்த உள்ளூர் மொழிகளில் திரைப்படங்கள் பாடல்கள் நாடகங்கள் எல்லாம் உள்ளதா என்று வேறு கேட்டு வைத்தேன்.
அதற்கும் அவர் விலாவாரியாக என்னன்னவோ சொன்னார்.
இறுதியில் அவை இப்போதெல்லாம் இல்லை என்று சற்று வருத்தமாக சொன்னார்.
அவரை கொஞ்சம் கிளறி விட்டதில் எனக்கு திருப்தி
ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் உறங்கி கொண்டிருக்கும் சுய சிந்தனையாளரை தட்டி எழுப்பி விட்டால் போதும்!
மீதியை அவரே பார்த்துக்கொள்வார்!
அவர் அந்த மொழிகள் பற்றிய விபரங்களை கூறும்போதும் அவரின் கண்களில் உண்மையாகவே ஒரு ஆர்வத்தையும் மின்னலையும் கண்டேன்.
அதுதான் எனக்கு தேவை!
தங்கள் மொழி ஹிந்தி என்று சொல்லும் இவர்கள் உண்மையில் ஒரு ஏமாளிகள்தான்
அவர்கள் தாழ்வு மனப்பான்மையில் தங்கள் அடையாளங்களை மறைக்கிறார்கள்
ஹிந்தி என்றால் ஏதோ உயர்ந்த இன்டெர்னசனல் மொழி என்ற அளவுக்கு ஆரிய காலனித்துவவாதிகள் பிரசாரம் செய்து அவர்களின் தன்னம்பிக்கையை தகர்த்திருக்கிறார்கள்
அவர்களின் அடையாளங்களை நாம்தான் மீட்டு எடுக்க வேண்டும் போல் தெரிகிறது
தேவைப்பட்டால் அதையும் நாம் செய்வோம்,
திராவிடம் எல்லா மனிதர்களுக்குமானது!
அழிந்து கொண்டிருக்கும் தெற்காசிய மாநில மண்ணின் மொழிகளை பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த இந்த கேள்விகள் உதவும்!
ஆரிய ஹிந்தி உருது காலனியின் அடிமையாக அவர்கள் இருப்பதை அவர்களுக்கு உணர்த்த இந்த கேள்விகள் பயன்படும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக