tamil.oneindia.com - Rajkumar R : டெல்லி: மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்வதாக நாடாளுமன்றத்தில் இன்று திமுக எம்பிக்கள் அனல் பறக்க பேசியது தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஊடகங்களிலும் இரு தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. இது ஒரு புறம் இருக்க இந்துமொழியை குறிப்பிட்ட தக்க வகையில் முன்னெடுத்துச் சென்றதற்காகவும் அலுவல் மொழிக் கொள்கையை திறம்பட செயல்படுத்தியதாக உள்துறை அமைச்சகத்தை நாடாளுமன்ற நிலை குழு பாராட்டி உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது திமுக எம்பிகள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசினர். குறிப்பாக கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்காது என பேசினார்.
தொடர்ந்து அதற்கு பதில் அளித்து பேசிய தர்மேந்திர பிரதான்,"தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழகம் கையெழுத்து போட வந்தபோது சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டார். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அம்மாநில அரசு வஞ்சிக்கிறது. திமுகவினர் அநாகரீகமானவர்கள். அவர்கள் ஜனநாயகம் இல்லாதவர்கள். அம்மாநில மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். அம்மாநில மக்களுக்கும் அவர்கள் நியாயமானவர்களாக இல்லை" என்றார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை மன்னர் போல எண்ணிக் கொண்டு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்துடன் பேசுவதாகவும், அவருக்கு நாவடக்கம் வேண்டும் என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தனது பேச்சுக்கு தர்மேந்திர பிரதான் வருத்தம் தெரிவித்ததோடு தனது கருத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்றைய திமுக எம்பிக்களின் செயல்பாடு பலத்த கவனத்தை பெற்றது. மேலும் இந்தி தினப்புக்கு எதிரான திமுகவின் நடவடிக்கை தேசிய ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தது.
இந்த நிலையில் தான் இந்தி மொழியை குறிப்பிடத்தக்க அளவில் முன்னெடுத்து சென்றதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடாளுமன்ற குழு பாராட்டி இருக்கிறது. 2025 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியை ஊக்குவிப்பதற்காக சுமார் 95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மதிய உள்துறை அமைச்சகத்தின் மானிய கோரிக்கையை குறித்து அறிக்கையில் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலை குழு, அகில இந்திய மற்றும் பிராந்திய அலுவல் மொழிகளில் பயன்பாட்டை அதிகரிப்பது, மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, அரசு அலுவலகங்களில் இந்தி பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்வது குறித்து அமைச்சகம் பரிசீலிக்கலாம் என கூறியுள்ளது.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்க வேண்டும் எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவைப்பட்டால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் எனவும் அந்த குழு வலியுறுத்தியுள்ளது.
பாஜக மூத்த எம்பி ஆன ராதா மோகன் தாஸ் தலைமையிலான இந்த குழு ஏஐ அடிப்படையிலான மொழிபெயர்ப்பு மென்பொருளான கந்தஷ்டாவின் வளர்ச்சியை பாராட்டியது. மேலும் கூடுதல் இந்திய மொழிகளை ஒருங்கிணைத்து மொழிபெயர்ப்பின் துல்லியத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை ஹிந்தி மொழியில் எழுதாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் எனவும், அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் இந்த நடவடிக்கையும் ஹிந்தி மொழியை ஊக்குவிப்பது போலவே இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக