செவ்வாய், 11 மார்ச், 2025

பீஹார் வங்கியில் கொள்ளை! துப்பாக்கியோடு நகைக்கடையில் நுழைந்த இளைஞர்கள் . 90 வினாடிகளில் மொத்தமாக கொள்ளை

 tamil.abplive.com - சுதர்சன் :  பீகார் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. வங்கியில் நுழைந்த இரண்டு சிறார்கள், 90 வினாடிகளில் 1.5 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறி இருக்கின்றனர்.
பீீகாரில் முகமூடி அணிந்து வங்கியில் நுழைந்த இரண்டு சிறார்கள், 90 வினாடிகளில் 1.5 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு, சாந்தமாக அங்கிருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் என்கவுண்டர் நடந்த ஒரு சில நாள்களிலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பதறவைக்கும் வங்கி கொள்ளை:
நாட்டில் சமீபகாலமாக, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முக்கிய நகரங்களில் பட்டப்பகலில் அரங்கேறும் கொள்ளை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வைஷாலி மாவட்டம் ஹாஜிபூர் நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. வங்கியில் நுழைந்த இரண்டு சிறார்கள், 90 வினாடிகளில் 1.5 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு, சாந்தமாக அங்கிருந்து வெளியேறி இருக்கின்றனர்.

வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி:
இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கொள்ளையர்களில் ஒருவர், வாடிக்கையாளர்களை துப்பாக்கியால் மிரட்டுகிறார். மற்றொருவர், அவர்களிடம் இருந்து பணத்தை வாங்குகிறார். இவை, அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சுமார் 1.5 லட்சத்தை அவர்கள் கொள்ளை அடித்திருக்கலாம்.

வங்கியில் வாடிக்கையாளர்கள் சிலர் அச்சத்தில் ஒன்றுகூடு நிற்பதும் சிலர், சிறிய பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருப்பதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சமயத்தில்தான், அந்த சிறார்கள் வங்கியைக் கொள்ளையடித்துச் சென்றனர்.


இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "17 மற்றும் 18 வயதுடைய இரண்டு குற்றவாளிகள் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் ரூ.1.5 லட்சத்துடன் தப்பிச் சென்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில், குற்றவாளிகளின் புகைப்படங்கள் அனைத்து குழுக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

வங்கியைக் கொள்ளையடித்த பிறகு, வங்கி மேலாளரையும் வாடிக்கையாளர்களையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு குற்றவாளிகள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்" என்றார்.

கருத்துகள் இல்லை: