திங்கள், 1 ஜூலை, 2024

ஆ. ராசா : முகலாயர்கள் அந்நியர்கள் என்றால், ஆரியர்களும் அந்நியர்கள்தான்!

 ஆ. ராசா : எனது மூதாதையர்கள் வறுமையினால் கல்வி அறிவின்மையாலும் பிழைப்பதற்கு இலங்கைக்கு சென்றார்கள்
அவர்களின் பேரன் நான் இன்று நாடாளுமன்றத்தில் உங்கள் முன்னால் நிற்கிறேன்
ராகுல் காந்திக்கு அருகில் அமர்ந்திருக்கிறேன்
மோடியை எதிர்த்து கொண்டு ..
என் மகள் லண்டனில் ஒரு புகழ் பெற்ற பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருக்கிறார்
இதற்கு யார் காரணம்? யார் காரணம்?
இதையெல்லாம் எங்களுக்கு செய்தது பெரியார்
அண்ணா அம்பேத்கர் கலைஞர்
திராவிட கோட்பாடுதான்  இதை செய்தது


எங்கள் திராவிட கோட்பாட்டை இந்தியா முழுமைக்குமானது  

மாலை மலர் :   குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் ஆ. ராசா பேசினார். அப்போது, எமர்ஜென்சி குறித்த பாஜக உறுப்பினர்களின் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை எப்படி என்று கூறமுடியும்.
அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக பலமுறை இந்திரா காந்தி மன்னிப்பு கேட்டார். அவசரநிலையை தற்போது பாஜக அரசின் செயல்பாட்டுடன் ஒப்பிட முடியாது.

பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை. குடியரசுத் தலைவர் சபாநாயகர் மூலம் சொல்கிறார்.

8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.

பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை உடைய பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.

திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.

8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் அவரவர் செய்து கொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் என்ற கொள்கையை பாஜக வலியுறுத்துகிறது.

பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து வந்துள்ளேன். எனது முன்னோர் வேலை தேடி இலங்கை சென்றனர். ஆனால் இன்று நான் ராகுலுடன் அவையில் இருக்கிறேன். அதற்கு காரணம் பெரியார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 10 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.

தமிழ்நாடு சட்டசபையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு மூலம் மெரிட், மேனேஜ்மெண்ட், பேமண்ட் என 3 -பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நிறுவனங்களின் லாபம் மீதான வரியை 33%-லிருந்து 20%ஆக குறைத்துவிட்டது மோடி அரசு. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை 2 பேர் வாங்குகிறார்கள், 2 பேர் விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை விற்று வேலைவாய்ப்பை பறிப்பதன் மூலம் இடஒதுக்கீட்டையும் மறைமுகமாக ஒழிக்கிறீர்கள்.

முகலாயர்கள் அந்நியர்கள் என்றால், ஆரியர்களும் அந்தியர்கள்தான். முகலாயர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றால், ஆரியர்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்தான்.

அதானி குழும முறைகேடு பற்றி 50 நாட்கள் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல மோடிக்கு முதுகெலும்பு இல்லை.

ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பதில் சொல்ல பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜக அரசுதான்.

அரசியலமைப்பை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என முழங்கியவர்கள், பிரதமரானவுடன் அதை எடுத்து வணங்கினார்கள்.

அரசியல் சாசன சபையில் உயர்சாதியினர்தான் அமர்ந்திருக்கின்றனர் என்று சைமன் கூறினார். பாஜக அரசியல் சட்டத்தை பின்பற்றுவதும் இல்லை, மதிப்பதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: