வெள்ளி, 5 ஜூலை, 2024

பிரிட்டன் -தொழில் கட்சி பெருவெற்றி , ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் படுதோல்வி

 மாலை மலர் : பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று ,
14 வருடங்கள் களைத்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு மிகவும் பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிராமராக பதிவியேற்க உள்ளார்.
61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் தனது இளமைப் பருவத்தில் ப்ளூட், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞராக இருந்துள்ளார். தனது இளம் வயதிலேயே சோசியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கெய்ர் தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின் இளம் சோசியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்கிறார்.



லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கெயர் ஸ்டேமர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்றார். 1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான ஸ்டேமர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார். ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.

1990 களில் மெக் லைப்ல் என்ற நிறுவனம் சுற்றுசூழல் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்தவர்களுக்காக வாதாடினார். பின்னர் 2008 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸ் அரசு வழக்கறிங்கர்களுக்கான இயக்குனர் பதவியில் அமர்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டிலே அவரின் முழுமையான அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. 2015 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு லண்டலில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு மிகவும் நெருக்கமானவராக கெய்ர் ஸ்டார்மர் இருந்தார்.

கடந்த 2019 பாரளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிட்டு கெய்ர் வெற்றிபெற்றார். கெய்ரின் வெற்றியுடன் தொழிலாளர் கட்சியின் புதிய சகாப்தம் தொடங்கியது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெக்ஸிட் என்ற திட்டத்தின்மூலம் பிரிட்டன் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது. ஆனால் அதற்கு எதிரின நிலைப்பாட்டை கொண்டவர் கெய்ர். கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியிடன் கிநைட்ஹூட் மற்றும் சர் பட்டம் பெற்றார். கெய்ர் ஸ்டார்மர் எப்போதும் தான் ஒரு உழைப்பாளி வர்க்கப் பின்னணி கொண்ட நபர் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: