சனி, 6 ஜூலை, 2024

2023 இல் ஆற்காடு சுரேஷை மர்ம கும்பல் படுகொலை செய்தது எப்படி? பின்னணி!

Armstrong BSP Chennai murder

tamil.oneindia.com - Vishnupriya R :  சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட நிலையில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆற்காடு சுரேஷ் யார் என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம்.
சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் ஆம்ஸ்ட்ராங் இருந்த போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில் போலீஸார் இந்த கொலை தொடர்பாக, 8 பேரை கைது செய்தனர். அவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பியும் ஒருவர். தனது அண்ணன் கொலைக்கு பழித் தீர்க்கவே கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா ஒப்புக் கொண்டார்.



இந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டது எப்படி என்பதை பார்க்கலாம். பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான பாம் சரவணனின் தம்பி தென்னரசுவை கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே அவரது குடும்பத்தினர் கண் முன்னே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.

15 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட புளியந்தோப்பை சேர்ந்தவர்தான் பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் வைத்து தென்னரசு கொலைக்கு ஒரு கும்பல் பழிவாங்கியது.

இந்த வழக்கில் அரக்கோணம் ஒற்றைக்கண் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி, நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், அரக்கோணம் மோகன், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின், சென்னை ஆயிரம் விளக்கு அதிமுக 111 ஆவது வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்தான் நிதியுதவி அளித்து கொலையாளிகளுக்கு தங்குவதற்கு இடமும் கொடுத்ததாக ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் கருதி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்ட போது அவருடன் இருந்த மாதுவை கடந்த ஜனவரி மாதம் ஜாம்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து கொலை செய்தது. இது ஆற்காடு சுரேஷ் தரப்பினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: