Kandasamy Mariyappan : முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் அவர்கள்.!
திருமதி. இந்திரா மற்றும் திரு. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, திருமதி. சோனியா அவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற முடிவோடு ஒதுங்கியிருந்தார்.!
திரு. நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்று, புதிய பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தார்.!
ஆனாலும், இந்துத்துவ கும்பலால் அமைதியாக இருக்க முடியவில்லை.!
எனவே காங்கிரஸ் கட்சிக்குள் சரத்பவார், அர்ஜூன் சிங், நட்வர் சிங், கருப்பையா மூப்பனார், மம்தா பானர்ஜி போன்றவர்கள் மூலமாக மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்தியது.!
கடைசியாக சீத்தாராம் கேசரி மூலமாக காங்கிரஸை படுகுழியில் தள்ளி, பாஜக ஆட்சிக்கு வந்தது.!
100 கோடி மக்களை கொண்ட, மிகப்பெரிய மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியா, மதவெறி பிடித்த இந்துத்துவ கும்பலின் கைக்குள் போவதை உணர்ந்த, திருமதி. சோனியா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்துத்துவ கும்பலை எதிர் கொண்டார்.!